2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருட்களுடன் புத்தளத்தில் மூவர் கைது

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

புத்தளம் தம்பபண்ணி கடற்படை விஷேடப் பிரிவினர் மற்றும் புத்தளம் பொலிஸார் இணைந்து, இன்று (05) காலை சந்தேகத்துக்கிடமான  வீடொன்றை முற்றுகையிட்டு,  சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது,  குறித்த வீட்டிலிருந்து 6 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோய்ன் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்  புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன்,   மேலதிக விசாரணைகளுக்காக,  புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .