2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் வெடிப் பொருள்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அசார் தீன்

புத்தளம்- தில்லையடி, ரத்மல்யாய பிரதேசத்தில் நபர் ஒருவரின் வீட்டிற்கு பின்னால் காணப்பட்ட காடு நேற்று (3) துப்பரவு செய்யப்பட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமான பொருள்கள் காணப்பட்டுவதாக,  புத்தளம் பொலிசாருக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிசார் குறித்த இடத்திற்குச் சென்று, மோட்டார் குண்டு ஒன்று, R.P.G.. குண்டுகள் சிலவவற்றையும் மீட்டுள்ளனர்.

 ன்று (4) புத்தளம் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம்,  குறித்த பகுதிக்கு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் சென்று,  வெடிபொருள்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து செயலிழக்கச் செய்ததாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X