Editorial / 2020 மே 30 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய வெஹரகெலே பகுதியில,; இன்று (30) இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஐவரும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேனில் பயணித்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியில் பயணிக்க முற்பட்ட போது, பின்பக்கமாக அதிக வேகத்தில் வருகை தந்த டிப்பர் வண்டி எதிரே வந்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் சாரதிகள் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் போக்குவரத்து பொலிஸார் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026