2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய 23 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.என்.முனாஷா

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 23 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்களை
கைதுசெய்துள்ளதாக நீரகொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

போதை மாத்திரைகளை விற்பனை செய்தோர், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தோர் உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 23 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், இச்சுற்றிவளைப்பின்போது போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 8  வீடுகளையும் கண்டுபிடித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

நீர்கொழும்பு, அரிச்சந்திரபுர பகுதியில் 7 வீடுகளும் ருக்கத்தன பகுதியில் ஒரு வீடும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில்; ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த அல்விஸின் மேற்பார்வையின் கீழ், நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் 69 பேர் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .