2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அஸ்பெஸ்டஸ் தடை நியாயமானதா?

Gavitha   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கையில் அஸ்பெஸ்டஸ் சீமெந்துக் கூரைத் தகடுகள் தடை செய்யப்படவுள்ளமை தொடர்பில், அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி 2018ஆம் ஆண்டில் இறக்குமதி மற்றும் உற்பத்தி என்பன தடை செய்யப்பட்டு, 2024ஆம் ஆண்டளவில் அவற்றை முழுமையாகப் பாவனையில் இருந்து அகற்றுவது என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டில்  சாதாரண மக்களின் வீடுகளின் கூரையை அமைப்பதற்கு இருப்பது இரண்டு அல்லது மூன்று வழிகள் மாத்திரமே. ஓடுகள், அஸ்பெஸ்டஸ் சீமெந்து கூரைத்தகடுகள் அல்லது வெறும் தகடுகள் என்பனவே இவையாகும்.  

இந்த விடயம் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, தேசிய தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்று, அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. அரசியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், இத்துறையில் ஈடுபட்டுள்ளோர், சுகாதாரத்துறை நிபுணர்கள், பல்வேறு பிரிவுகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊழியர் பிரதிநிதிகள் உட்பட பெருந்தொகையானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.  

இங்கு கலந்துரையாடப்பட்ட பிரதான விடயம் என்னவென்றால், சுகாதாரத்துக்கு  தீங்கை விளைவிக்கும் அஸ்பெஸ்டஸ் சீட்டுகளைத் தடை செய்யத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதாகும். தொழில், சுகாதாரம் தொடர்பான தொழில் வல்லுநரும் சுகாதாரம் பற்றிய தொழில் ஆணையாளருமான வைத்தியர் வஜிர பலிபான இங்கு கருத்து வெளியிடுகையில், நுரையீரல் புற்று நோய்க்கு ஒரே காரணம் கிறிசோடைல் அஸ்பெஸ்டஸ் மாத்திரம் இல்லை என்பதாகும். ஏனையை அனைத்துப் பொருட்களையும் போன்று அதுவும் ஒரு காரணமாக அமையலாம் என்று அவர் கூறினார். அஸ்பெஸ்டஸ் காரணமாக நுரையீரல் சுவர்கள் கடுமையாகி அவற்றின் செயற்பாடு குறைவடையலாம் என்றாலும்கூட, அது மரணம் வரை கொண்டு செல்லாது என்றும் அவர் கூறினார்.  

ஆனால், அஸ்பெஸ்டஸ் தாக்கத்துக்கு நீண்ட நேரம் உள்ளாகுவோர் புகைப் பிடித்தலைத் தடுத்துக் கொள்வது ஒரு கட்டாயத் தேவையாகும் என்று அவர் கூறினார். புகைத்தல் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகிறது. அதன் மூலம் புற்று நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. இதனால், அஸ்பெஸ்டஸ் சீமெந்துத் தகடு உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களைப் புகை பிடித்தலில் இருந்த தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அஸ்பெஸ்டஸ் சீமெந்து தகடு தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது எக்ஸ்-கதிர் பரிசோதனைக்கு உட்படுத்துவது மிகவும் உகந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். வருடா வருடம் அதனை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறிய அவர், எக்ஸ்-ஙகதிர்கள் மூலம் கூட புற்று நோய் ஏற்பட முடியும் என்பதுடன் அவற்றின் தாக்கத்துக்கு அடிக்கடி உள்ளாகக் கூடாது என்று குறிப்பிட்டார்.  

இந்தப் பிரச்சினைக்கு வழங்கக்கூடிய சிறந்த தீர்வு, அஸ்பெஸ்டஸ் பயன்பாட்டின் பின் அவற்றை அகற்றும் போது, பாதுகாப்பாகவும், சுகாதார ரீதியிலும் மேற்கொள்வதற்குரிய சட்ட முறைமைகளை ஸ்தாபிப்பதுதான் என்று அவர் மேலும் சொன்னார்.  

கடந்த 60 வருட காலத்தில் Mesotheliama அல்லது அஸ்பெஸ்டஸ்கள் காரணமாக ஏற்படும் வேறு எந்தவொரு புற்று நோய்களும் இந்நாட்டில் இதுவரை பதிவாகவில்லை என்பது தெளிவாகக் காணப்படுகிறது. இலங்கை தொடர்பாகத் தரவுகளையும், தகவல்களையும் உன்னிப்பாக அவதானிக்குமாறு பைபர் சீமெந்துக் கூரைத்தகடு உற்பத்தியாளர்களின் சங்கம் இதன்போது கேட்டுக்கொண்டது. அதன்போது வைத்தியர் பலிப்பான அவர்கள் தெரிவிக்கையில், இந்தத் தலைப்பு தொடர்பாக இதுவரை இலங்கையில் எவ்வாறான சுகாதார ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அவ்வாறானதொரு ஆய்வை மேற்கொள்வது மிகவும் உகந்தது என்றும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--