Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலரும் பண்டிகைக்காலத்தை எலக்சான்ட்ரா பிளேஸில் அமைந்துள்ள தனது பிரதான ஒடெல் காட்சியறைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தமது எண்ணம் போல் கொள்வனவுகளை மேற்கொண்டு நாவுக்கு ருசியான உணவு வகைகளை சுவைப்பதற்கான வாய்ப்பை ஒடெல் ஏற்படுத்தியுள்ளது.
ஒடெல் தனது பிரதான காட்சியறையில் இப் பண்டிகைக்கால அனுபவத்தை மேலும் மெருகூட்டியிருப்பதுடன் உணவு வகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பரந்த அளவிலான நவீன The Promenade – ODELஐ திறந்துள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களையும் கூடியிருந்தவர்களையும் மகிழ்விக்கும் வகையில் ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்தியதுடன் இப்பண்டிகைக்காலத்தில் ஒடெலில் கொள்வனவு செய்ய கூடிய ஆடை அணிகலன்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இப்பண்டிகைக்காலத்தில் எலெக்சான்ட்ரா பிளேஸில் அமைந்துள்ள ஒடெல் பிரதான காட்சியறைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 16,000 சதுர அடியிலானப் பிரதேசத்தில் புதிய பாணியிலானத் திறந்த வெளி உணவு பான காட்சிக் கூடத்தில் அமர்ந்து நிம்மதியாக தமது நாவுக்கு ருசியான உணவு வகைகளைப் ருசிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது. இந்த நவீன உணவுக் காட்சியகமானது சொப்ட்லொஜிக் குழுமத்தின் தலைவர் அசோக் பதிரகேயினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாரியதும் உயர் தரத்திலும் அமையப்பெற்றுள்ள The Promenade – ODELஇல் 2 உணவகம், கெபே ஒன்று, 8 உணவு பான விற்பனை நிலையம் மற்றும் நேல் அன்ட் புட் ஸ்பா ஒன்றும் உள்ளது.இவ் உணவு கூடத்தில் வாடிக்கையாளர்களின் சுவை தேவைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பரந்தளவிலான பானங்கள் விற்பனைச் செய்யப்படுவதுடன் “எலெக்சான்ட்ரா அன்ட் வோட்” பஷன் கருப்பொருளைக் கொண்ட உணவகத்தின் மூலம் இத்தாலி உணவு வகைகள் மற்றும் Nihonbashii உணவகம் மூலம் ஜப்பான் உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன. அத்துடன் Sugar Bistro & Bar மூலம் அமெரிக்க உணவுகள் பரிமாற்றப்படுவதுடன் Bubble Tea, Il Gelato, Roots, Mango Tree, Chariot, Hot Dog/Chop Shop, Sea Food Shack மற்றும் Magic Corn போன்ற விற்பனைக் கூடங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த உணவு வழங்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
47 minute ago