Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
53ஆவது கொழும்பு சாரணர் ஜம்போறி நிகழ்வின் உத்தியோகபூர்வ வங்கிச்சேவைப் பங்காளராக சம்பத் வங்கி செயலாற்றியிருந்தது.
குறிப்பாக இலங்கை மக்களின் அடுத்த தலைமுறையை வளர்க்கும் நோக்குடன் சமூகப் பொறுப்புணர்வு மிக்க முன்னெடுப்புக்களுக்கு உதவுவதில் சம்பத் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டின் விளைவாக இந்த ஆண்டு சாரணர் முகாமுக்கான அனுசரணை அமைந்துள்ளது.
“தேசத்தில் இளைஞர், யுவதிகளின் வளர்ச்சி வாய்ப்புகளை முன்னெடுத்து, நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் சம்பத் வங்கி எப்போதும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. எதிர்காலத்தில் அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக வளர்க்கும் நோக்குடனான நிகழ்ச்சித்திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நாம், 53 ஆவது கொழும்பு சாரணர் ஜம்போறிக்கு எமது ஆதரவை வழங்குவதையிட்டு கௌரவம் அடைகின்றோம்” என்று மாவட்ட ஆணையாளராகவும், ஜம்போறி ஏற்பாட்டு ஆணையாளராகவும் முன்னர் சேவையாற்றியுள்ள சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரான நந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜம்போறியின் ஏற்பாட்டு ஆணையாளரான அமில் அபேசுந்தரவிடம் வங்கியின் அனுசரணைக்கான காசோலையை பெர்னாண்டோ பிரத்தியேகமாக கையளித்தார். 6,000 சாரணர்கள், குருளைச் சாரணர்கள் மற்றும் சிங்கிதி சாரணர்களின் ஒன்றுகூடலாக இந்த விலைமதிப்பற்ற நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக ஏற்பாட்டு ஆணையாளருக்கும் மற்றும் சபைக்கும் வங்கியின் சார்பில் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தின் நற்பிரஜைகளை கட்டியெழுப்ப இது உதவும் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது.
நிதியியல் ரீதியான ஆதரவை வழங்குவதற்கும் அப்பால், இதில் கலந்து கொண்டவர்களின் தலைமைத்துவ மற்றும் தொழில் முயற்சித் திறன்களை பட்டைதீட்ட உதவுகின்ற வகையில் தொடர் போட்டிகள், வங்கிச்சேவை மற்றும் நிதியியல் சார்ந்த செயற்பாடுகளையும் சம்பத் வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago