2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

2000 செலிங்கோ லைஃவ் காப்புறுதிதாரர்கள் லெஷர் வேர்ள்டில் உல்லாசம்

Editorial   / 2017 மே 22 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் ஒரே இடத்தில் ஒன்று திரண்டு உல்லாசமாகப் பொழுதைக் கழித்த நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. கடந்த வாரம் லெஷர் வேர்ள்டில் செலிங்கோ லைஃவ் பத்தாவது குடும்ப சவாரித் திட்டம் அரங்கேற்றப்பட்ட போது இவ்வாறு காப்புறுதிதாரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டம் 500 காப்புறுதிதாரர்களையும் அவர்களின் குடும்பங்களையும் உள்ளடக்கி இருந்தது. ஆயுள் காப்புறுதி சந்தைப் பிரிவில் தலைமை தாங்கும் நிறுவனமான செலிங்கோ லைஃவ் குடும்ப சவாரித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தொகுதி வெற்றியாளர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

உல்லாச பூங்காவின் சகல வசதிகளையும் வாய்ப்புக்களையும் அனுபவிக்கும் சந்தர்ப்பம் இவர்களுக்கு கிட்டியது. ஒரே குழுவாக ஒன்றிணைந்து தரமான வசதிகள் அணைத்தையும் அனுபவிப்பதில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இது அமைந்தது. இந்த இடத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு ஹெலிகொப்டர்கள் மூலம் ஆகாய வலம் வரும் வாய்பபு வழங்கப்பட்டமை மேலதிக திகில் மிக்க அனுபவமாக அமைந்தது. அரலகன்வில, கம்புறுபிட்டிய, கதுறுவல, மாஹோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது.2017 குடும்ப சவாரி ஊக்குவிப்பின் இந்த முதலாவது கட்டத்தின் தொடராக மே மாத பிற்பகுதியிலும் ஜுன் மாதத்திலும் தொடரான வெளிநாட்டுப் பயணத் திட்டத்தின் கீழ் 65 செலிங்கோ ஆயுள் காப்புறுதிதாரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 260 பேருக்கு முழுச் செலவுடன் கூடிய வெளிநாட்டுப் பயண வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 50 குடும்பங்களுக்கான சிங்கப்பூர் பயணம், பத்து குடும்பங்களுக்கு துபாய் செல்லும் வாய்ப்பு, ஐந்து குடும்பங்களுக்கு இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு என்பன இதில் இடங்கும்.

உள்நாட்டு உல்லாசப் பயணம், கடல்கடந்த பயணம் என்பன உட்பட மொத்தம் 2260 பேர் செலிங்கோ குடும்ப சவாரி விடுமுறைத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இன்று வரை இந்தத் திட்டத்தின் மூலம் நன்மை அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 20ஆயிரம் ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .