2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்றில் டிமோ காட்சியறை

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிமோ தனியார் நிறுவனம் தனது கட்சியறை ஒன்றை அக்கரைப்பற்றில் அண்மையில் திறந்து வைத்தது.

இக்கிளையின் மூலம் டிமோ நிறுவனத்தின் சர்வதேச தரத்திலான உற்பத்திகள் மற்றும் சேவைகளை கிழக்கு மாகாண வாடிக்கையாளர்களின் காலடியில் கொண்டு செல்வதே பிரதான நோக்கமாகும்.

இக்காட்சியறையின் ஊடாக அதி சிறந்த டாடா வர்த்தக வாகனங்கள், பிரயாண வாகனங்களை  கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு மேலதிகமாக மஹிந்ரா டெக்டர்ஸ், ஒஸ்ராம் லைட்ஸ், எம்.ஆர்.எப் டயர்கள், மிச்லோன் டயர்கள், சீமென்ஸ் ஆளிகள் மற்றும் பொஸ்கோ மின் இயந்திரங்கள் என்பவற்றை இந்த காட்சியறை மூலம் கொள்வனவு செய்ய முடியும்.

டிமோ நிறுவனம் தனது வலையமைப்பை விருத்தி செய்யும் நோக்கிலேயே அக்கரைப்பற்றில் கிளை ஒன்றை திறந்துள்ளது. ஏற்கனவே டிமோ நிறுவனத்திற்கு யக்கல, குருநாகல், தம்புள்ளை, அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி, அம்பலாங்கொடை, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் கிளைகள் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .