2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

எஸ்.ஏ.சில்வா அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் புதிய உடனடி உணவு வகைகள்

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பொதியிடல் முறையில் புதியதோர் அறிமுகத்தை ஏற்படுத்திய சில்வர்மில் கூட்டு வியாபார நிறுவனம், தமது புதிய உணவு உற்பத்திகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய உணவு உற்பத்திகளில், உடனடி காலை வேளை உணவு ஒன்றும், பகல் மற்றும் இரவு வேளைகள் உணவு இரண்டும் அடங்குகின்றன.

இலங்கையர்களின் உணவுப் பாவனைப் பழக்க வழக்கத்தை விருத்தி செய்யும் நோக்கில், இந் நிறுவனத்தின் பரீட்சார்த்த மற்றும் அபிவிருத்தி பிரிவினால், பல வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரமே இந்த புதிய உணவுத் தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாவனையாளர்களுக்கு இலகுவாக உபயோகிக்க கூடிய வகையிலும் வேலைப்பளுமிக்க இல்லத்தரசிகளின் உணவு தயாரிக்கும் வேலைப்பளுவை குறைக்கும் வகையிலும் இந்த உணவுத் தொகுதி அமைந்துள்ளதுடன் மேலும் போஷாக்கு மிக்கதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காலை ஆகார வேளையில், Tropical fruit combo எனும் இயற்கை பழங்களால் தயாரிக்கப்பட்ட பகுதி உணவு வேளையாக உள்ளடங்குகிறது. பிரதான காலை உணவு வேளையாக Fruity nut breakfast crunch இயற்கை பழங்களும், தேன் அடங்கிய போஷாக்கிய உணவு வேளையாக அமைந்துள்ளது.

அத்துடன் Fruit and Nut breakfast bar இலங்கையர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இலாபகரமான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பாடசாலை மாணவர்களுக்கும், தொழில்புரிவோர்க்கும் ஏற்ற உகந்த உணவு வேளையாக அமைந்துள்ளது.

இலகுவாக உடனடியாக தயாரித்துக்கொள்ளக் கூடிய மரக்கறி மற்றும் அரிசி அடங்கிய 'சில்வர்மில்' பகல், இரவு உணவு தயாரிப்புகள், 5 நிமிடங்கள் கொதி நீரில் இட்டு வைப்பதன் மூலம் போஷாக்கு நிறைந்த உணவாக தயாரித்துக் கொள்ள முடியும். இதில் எந்தவிதமான செயற்கை சேர்வைகளும், மொனோ சோடியம் குளுடமேட் (M.S.G)  போன்றன சேர்க்கப்படாமை விசேட அம்சமாகும்.

இதற்கு மேலதிகமாக 'சில்வர்மில்' உடனடி தேங்காய் சம்பலும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், மிகவும் இலாபகரமான குறைந்த விலையில் இதனை கொள்வனவு செய்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைப்பளு மிக்க இல்லத்தரசிகளுக்கு தேங்காய் உடைத்து, சம்பல் தயாரிப்பதற்கான நேரத்தை மீதப்படுத்திக் கொள்ள முடியுமென நிறுவனம் அறிவித்துள்ளது.

இத்தயாரிப்புகள் குறித்து எஸ்.ஏ.சில்வா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தினேஷ் சில்வா கருத்து தெரிவிக்கையில், தற்காலத்தில் உள்ள வேலைப்பளு காரணமாக பலர் தமது காலை உணவு வேளையை எடுக்கத் தவறி வருகின்றனர். அத்துடன் இல்லத்தரசிகள் தமது வேலைப்பளு காரணமாக பிள்ளைகளின் போஷாக்கான உணவு வேளை குறித்தும் கவனம் செலுத்தத் தவறுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இந்த 'சில்வர்மில்' உடனடி உணவு வேளைகள் அமைந்துள்ளதென கூறினார்.

சில்வர்மில் தயாரிப்புகளில், Vegebite Del, Tropical Fruit Cocktail, Sweetend Mango, Sweetend Pineapple, Spicy Mixed Vegebite போன்ற சிற்றுண்டி தயாரிப்புகளும் சந்தையில் விற்பனைக்கு காணப்படுகின்றன.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .