2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் டயலொக் ரெலிகொம் நிறுவனத்தின் புதிய பிராந்திய கிளை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

டயலொக் ரெலிக்கொம் நிறுவனத்தின் வன்னி பிராந்திய கிளை முகவர் நிலையம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வவுனியா, முதலாம் குறுக்கு தெருவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

நாட்டின் முன்னணி கைடயக்க தொலைபேசி சேவை நிறுவனமான டயலொக், வன்னி உட்பட்ட நாடாளவிய ரீதியில் தனது வலையமைப்பு விஸ்தரித்துள்ள நிலையில் வன்னி பிராந்திய முகவர் நிலையம் திறக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு மேலும் சேவைகளை வழங்கும் நோக்கமாகும் என நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். டயலொக் நிறுவனத்தின் சிரேஸ்ட பொதுமுகாமையாளர் பிரதீப் கீர்த்திரட்ண கிளை நிலையத்தை திறந்தவைத்தார் வைபவத்தில் பலர் கலந்து கொண்டனர்.

சர்வ மத தலைவர்களுடைய ஆசி உரையும் இடம்பெற்றது வாடிக்கையாளருக்குரிய சேவைகள் உடனடியாகவே பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

முதலாவது கொடுப்பனவை வாடிக்கையாளரும், வவுனியா சிற்றி ஏஜன்சீஸ் உரிமையாளருமான  செந்தில்நாதன் மயூரன் செலுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--