2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் புதிய கல்வியாண்டுக்கான அனுமதி வழங்கல் ஆரம்பம்

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தகவல் தொழில்நுட்பம், இலத்திரனியல் பொறியியல் மற்றும் வர்த்தக முகாமைத்துவ கற்கைகளை இலங்கையில் வழங்குவதில் முன்னணியில் திகழும் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம், புதிய கல்வியாண்டுக்கான அனுமதி வழங்கலை ஆரம்பித்துள்ளது.

1999ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட புரட்சியை தொடர்ந்து துறைசார் நிபுணர்களை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம், இலங்கையின் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரும் பட்டங்களை வழங்களை வழங்கும் நிறுவனமொன்றாகத் திகழ்கிறது.

கல்வியகத்தின் தாபகர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறை பாரியளவு விருத்தியடைந்துள்ளது. இதற்கேற்ப துறைசார் நிபுணர்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. அந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நாம் பல தகவல் தொழில்நுட்ப துறைசார் நிபுணர்களை உருவாக்கி வருகிறோம்' என்றார்.

கல்வியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில், 'வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் நாம் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம். இதில் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்குகின்றன. மேலும் எமது கல்வியகத்தில் தமது உயர்கல்வியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் எமது பங்காளர் நிறுவனங்களுடன் செயலாற்றி வருகிறோம்' என்றார்.

அண்மையில் கல்வியகத்தின் கிளைகள் யாழ்ப்பாணத்திலும் பங்களாதேஷ் நாட்டிலும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புதிய மாணவர்களுக்கான அனுமதி தொடர்பான மேலதிக விபரங்களை www.sliit.lk எனும் இணையத் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--