2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கிருமிகளிலிருந்து பாதுகாக்கும் புதிய டெட்டோல் சவர்கார வகைகள் அறிமுகம்

Super User   / 2010 நவம்பர் 10 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

றெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பும், கிருமிகளுக்கு எதிராக போராடுவதில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற டெட்டோல் சவர்கார வகைகளின் புதிய தயாரிப்புகள் அண்மையில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் பாவனையாளர்களுக்கு புத்துணர்வு மிக்க, கிருமிகளற்ற குளியல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய டெட்டோல் சவர்கார வகைகள் கையாள்வதற்கு இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பாவனையாளர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சவர்கார கட்டியை உபயோகிக்க முடியும். அத்துடன் புதிய நறுமணமும், நுரைக்கும் தன்மையும் பாவனையாளர்களுக்கு புத்துணர்வான குளியல் வேளையை வழங்குகிறது.

அனைத்து இலங்கையர்களினதும் நன்மதிப்பை வென்ற டெட்டோல், நாடு பூராகவும் அனைத்து பிரதேசங்களிலும் கிருமிகளின் தாக்கங்களுக்கு எதிராக போராடுகிறது. மேலும் சிறந்த சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் செயலாற்றும் ஒவ்வொரு இலங்கையரினதும் முதற்தர தெரிவாக டெட்டோல் அமைந்துள்ளது. சுகாதாரம் மற்றும் சுத்தம் சம்பந்தமான பல்வேறு சமூக விழிப்புணர்வு செயற்திட்டங்களை டெட்டோல் கடந்த காலங்களில் சுகாதார அமைச்சின் ஆதரவுடன் முன்னெடுத்திருந்தது.

றெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரியாசுல் சௌத்திரி கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் தாய்மார்களின் மனதை வென்ற தயாரிப்பாக மற்றும் டெட்டோல் திகழாமல், இலங்கையில் அறிமுகமான பல புதிய தயாரிப்புகளில் முன்னணியில் திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது' என்றார்.

றெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சகாரியா அஹமட் கருத்து வெளியிடுகையில், 'கடந்த காலங்களில் நாட்டின் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முன்னேற்றத்தில் டெட்டோல் பங்களிப்பு வழங்கியுள்ளது. இவ்வாண்டு எமக்கு மிகவும் முக்கியமானதாகும் ஏனெனில் 50 வருடத்தை டெட்டோல் பூர்த்தி செய்துள்ளது. இதை குறிக்கும் வகையில் புதிய தயாரிப்புகளை கிருமிகளுக்கு எதிராக போராடும் வகையில் அறிமுகம் செய்துள்ளோம்' என்றார்.

டெட்டோல் சிரேஷ்ட வர்த்தக குறியீட்டு முகாமையாளர் ஷமீனா பாலீ கருத்து தெரிவிக்கையில், 'நான்கு வௌ;வேறான தயாரிப்புகளிலும் மூன்று வௌ;வேறான அளவுகளிலும் டெட்டோல் சவர்கார வகைகள் காணப்படுகின்றன. ஒரிஜினல், சரும பாதுகாப்பு , குளிர்ச்சி, புத்துணர்ச்சியான சோப்  போன்ற நான்கு வௌ;வேறான தயாரிப்புகளில் இந்த சோப் வகைகள் காணப்படுகின்றன. அனைத்து சோப் வகைகளும் கிருமி கொல்லிகள், நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு போன்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன' என்றார்.

டெட்டோல் சவர்கார தயாரிப்புகளுக்கு மேலதிகமாக சந்தையில் டெட்டோல் அன்டிசெப்டிக் லிக்விட், ஹான்ட்வொஷ், பிளாஸ்டர், ஷேவிங் கிறீம் மற்றும் இன்ஸ்டன்ட் போன்ற தயாரிப்புகளில் சந்தையில் காணப்படுகின்றன.

டெட்டோல் தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஒரு சிலவற்றின் உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், 'டெட்டோல் தயாரிப்புகள் பாவனையாளர்களுக்கு சிறந்த பெறுமதியையும், மனநிம்மதியையும், கிருமிகளுக்கு எதிராக போராடி பாதுகாப்பையும் வழங்குகிறது. இதனால் டெட்டோல் தயாரிப்புகளை எமது நிறுவனங்களில் விற்பனை செய்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம்' என்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .