2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

எடிசலாட் அனுசரணையில் இயற்கை புகைப்படப்பிடிப்பாளர் போட்டி

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் ஹோட்டல் குழுமத்தின் ஓர் அங்கமான யால விலேஜ் ஹோட்டல் மற்றும் எடிசலாட் லங்கா ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'இயற்கை புகைப்படப்பிடிப்பாளர் 2010' போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தன.


நாடு பூராகவும் நடைபெற்ற இயற்கை புகைப்படப்பிடிப்பு போட்டியில், உள்நாட்டு புகைப்படப்பிடிப்பாளர்களினால் வன உயிரியல் புகைப்படங்கள் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 
 

இது தொடர்பில் ஜோன் கீல்ஸ் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் சிதரல் ஜயதிலக கருத்து தெரிவிக்கையில், 'இந்த வருடத்தின் மேற்படி இரண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பில் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் 280 போட்டியாளர்கள் 800க்கும் அதிகமான புகைப்படங்களை சமர்ப்பித்திருந்தனர். இவை பறவைகளின் செயற்பாடுகள் மற்றும் மிருகங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் காணப்பட்டன' என தெரிவித்தார்.


இந்த போட்டியில் இளம் சந்ததியினரின் ஆர்வத்திற்கு சக்தியூட்டும் முகமாக, அதியுயர் தரம் வாயந்த கையடக்க தொலைபேசிகளின் மூலம் பிடிக்கப்பட்ட, இயற்கை புகைப்படங்களும் போட்டி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
 

இதன் வெற்றியாளர்களுக்கு எடிசலாட் நிறுவனத்தினால் கையடக்க தொலைபேசிகளும் பரிசிலாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வு அண்மையில் லையனல் வென்ட் ஹரோல்ட் பீரிஸ் கலரியில் நடைபெற்றிருந்தது. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .