2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பாக். பேரீச்சை ஏற்றுமதியாளர்கள் இலங்கை வந்தனர்

Super User   / 2011 ஜூலை 15 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் நாட்டு பேரீச்சம் பழ வகைகளை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக பாகிஸ்தான் பேரீச்சம் பழ உற்பத்தியாளர்கள் மற்றும்  ஏற்றுமதியாளர்கள் தூதுக்குழுவொன்று இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.

இத்தூதுக்குழுவினர் நாட்டிலிருக்கும் கால பகுதியில் இலங்கை பழ இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டு பேரீச்சம் பழங்கள் இதுவரை அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரித்தானியா உட்பட 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யடுவதுடன் உலக சந்தைகளில் அதிக கிராக்கியையும் கொண்டுள்ளது.

உலகில் பேரீச்சம் பழ ஏற்றுமதியில் உற்பத்தியில் இரண்டாவது ஏற்றுமதி நாடாகவும் நான்காவது பாரிய உற்பத்தியாளராகவும் பாகிஸ்தான் காணப்படுகின்றது.

வருடாந்தம் 80,000 ஹெக்டயர் பரப்பளவில் 6.5 மில்லியன் மெட்ரிக் தொன்னுக்கு மேற்பட்ட பேரீச்சம் பழம் பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படுகின்றது.


  Comments - 0

  • risimb Sunday, 17 July 2011 09:09 AM

    "'சுங்க அதிகாரிகளே!! '' பேரீச்சம் பழங்களை நன்றாக பரிசோதியுங்கள் " ஒக்கே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--