2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சுவதேஷி மூலம் 'லேடி' பர்ஃபியும் வகை அறிமுகம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 23 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் முன்னணி மூலிகையினாலான பிரத்தியே பராமரிப்பு தயாரிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனமான சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் தனது பர்ஃபியும் தயாரிப்புகளில் புதிய ஆறு தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட பர்ஃபியும் வகையாக 'லேடி' தயாரிப்புகள் அமைந்துள்ளன. இந்த தயாரிப்புகள் இலங்கையின் இளம் பராய பெண்களிடையே அதிகளவு வரவேற்பையும் பெற்றுள்ளன.

இந்த புதிய வகையான 'லேடி' பர்ஃபியும்கள் ஜஸ்மின், லோட்டஸ், அரலிய, ஓர்க்கிட், பிளக் ரோஸ் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேபாலிகா வகை போன்றவற்றில் அமைந்துள்ளன. இந்த பர்ஃபியும் வகைகள் அனைத்தும் அதியுயர் தரம் வாய்ந்த இயற்கை பூக்களின் நறுமணங்களை கொண்டுள்ளன. இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

சுவதேஷி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், 'பிரத்தியேக பராமரிப்பு தயாரிப்புகளை இயற்கை மூலிகைகளின் மூலம் மேற்கொள்வதில் தசாப்த கால அனுபவத்தின் மூலம் இந்த புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுவதேஷி நிறுவனம் இயற்கை மூலிகைகளின் பயன்பாட்டுக்கு அதிகம் புகழ்பெற்ற நிறுவனமாக சுவதேஷி நிறுவனம் திகழ்வதுடன், இந்த புதிய தயாரிப்புகளும் வாடிக்கையாளர்களிடையே அதிகளவு வரவேற்பை பெறும் என்பதில் நாம் அதிகளவு நம்பிக்கையை கொண்டுள்ளோம். இயற்கை பூக்களில் அடங்கியுள்ள ஒருவிதமான எண்ணெய் மூலமே இந்த நறுமணம் பெறப்படுகிறது. இந்த எண்ணெய் இதர தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்தும் காரணியாக அமைந்துள்ளது' என்றார்.

மேலும் இந்த பர்ஃபியும் வகையில் சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற பர்ஃபியும் வகைகளில் காணப்படும் சேர்மானங்கள் அடங்கியுள்ளமை விசேட அம்சமாகும். இலங்கையில் சேபாலிகா நறுமணத்திலான பர்ஃபியும் வகையை அறிமுகம் செய்வதில் சுவதேஷி முன்னணி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பர்ஃபியும் வகைகள் 33 மி.லீ. கண்கவர் கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்டு 195 ரூபாவுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

சுவதேஷி நிறுவனம், ஐளுழு 9001:2008 தரச் சான்றிதழை பெற்றுள்ளது. இந்நாட்டு வளங்களை பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பர்ல்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃவியும் மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் குடும்ப சுகாதாரத்துக்கு உகந்த 'சேஃப்பிளஸ்' சவர்க்காரம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .