2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

தங்க மயில் விருதை வென்றெடுத்த கெய்ன் இந்தியா

A.P.Mathan   / 2012 நவம்பர் 12 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றதும் இந்தியாவின் முன்னிலை எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி நிறுவனமுமான கெய்ன் இந்தியா 2012 இற்கான 'கூட்டக நிறுவன ஆளுகைக்கான தங்க மயில்' விருதை வென்றெடுத்துள்ளது.

பிரித்தானியாவின் சமூக மற்றும் உள்ளூராட்சிமன்றத்துக்கான வெளிவிவகார செயலாளர் எரிக் பிக்கல்ஸிடமிருந்து கெய்ன் நிறுவனம் சார்பாக அதன் அனர்த்த பாதுகாப்பு பணிப்பாளரும் கூட்டுநிறுவன செயலாளருமான நிர்ஜா சர்மா விருதினை பெற்றுக்கொண்டார்.

சுவீடனின் முன்னாள் பிரதமரும் வனாந்தரம் மற்றும் சூழல் பாதுகாப்பு அபிவிருத்திக்கான உலக ஆணைக்குழுவின் இணை தலைவருமான ஒலா உல் ஸ்டனும், பணிப்பாளர்களுக்கான இந்திய நிறுவனத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ்.அளுவாலியா ஆகியோரும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த விருதை வென்றெடுத்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த கெய்ன் இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் பி.இளங்கோ, எமது வர்த்தக நடவடிக்கைகள் உயர்ரக தரங்களை கொண்டும், சிறப்பான ஒழுக்க நெறிமுறைகளையும் சிறந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதன்மூலம் கூட்டக நிறுவன ஆளுகையின் கீழ் உத்தரவாதம், பொறுப்பு ஆகியவற்றை மேம்படுத்தி எமது பங்காளர்களையும் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்' என கூறினார்.

கடந்த 17 ஆண்டுகளாக கெய்ன் இந்தியா ஹைதரோகார்பன் ஆய்வு, கண்டுபிடிப்பு ஆகியவற்றை மேற்கொண்டுள்ளதுடன் தமது நடவடிக்கைகள் மூலம் நாளாந்தம் 200,000 பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றது. இது இந்தியாவின் நாளாந்த உற்பத்தியின் 20வீதமாக அமைந்துள்ளது. 

இங்கிலாந்தின் லண்டன் நகரிலுள்ள லோர்ட்ஸ் மைதானத்தின் நேர்சரி மண்டபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்கள் பலரும் கலந்து விழாவை அலங்கரித்தமை விசேட அம்சமாகும். 

பட விளக்கம்:
இடமிருந்து : கெய்ன் இந்தியாவின் அனர்த்த பாதுகாப்பு பணிப்பாளர் நிர்ஜா சர்மா தங்க மயில் விருதை பிரித்தானியாவின் சமூக மற்றும் உள்ளூராட்சிமன்றத்துக்கான வெளிவிவகார செயலாளர் எரிக் பிக்கல்ஸிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் சுவீடனின் முன்னாள் பிரதமர் ஒலா உல் ஸ்டன்,   பணிப்பாளர்களுக்கான இந்திய நிறுவனத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ்.அளுவாலியா ஆகியோரும் காணப்படுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .