2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

வாகனங்களின் விலை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் சுங்கத்தீர்வை அதிகரிக்கப்பட்டதால், சகல வகையான வாகனங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத்சந்திர தெரிவித்தார்.

இதன் பிரகாரம் வாகனங்களின் விலை 2 இலட்சம் ரூபாவிலிருந்து 5 இலட்சம் ரூபாவுக்கு இடையில் அதிகரிக்கப்பட்டுள்ளது  சிறியரக காரான மாருதியின் விலை 2 இலட்சம் ரூபாவினாலும் டொயோட்டா விட்ஸ்ன் விலை 2 இலட்சம் ரூபாவிலிருந்து இரண்டரை இலட்சம் ரூபா வரை  அதிகரித்துள்ளது.

இதேவேளை, வான் மற்றும் லொறி ஆகியவற்றின்  விலைகள் 4 இலட்சம் ரூபாவினாலும் 5 தொன் எடையுடைய வாகனங்களின் விலைகள் 4 இலட்சம் ரூபா முதல் 5 இலட்சம் ரூபாவினாலும்   அதிகரித்துள்ளன.(சத்துரங்க பிரதீப்)

  Comments - 0

  • lankan Thursday, 15 November 2012 07:35 AM

    The Rich Get Richer, the Poor Get Poorer++

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .