2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வடமேல் மாகாணத்தில் 'லிவ், லேர்ன், லாஃப்' செயற்றிட்டம் முன்னெடுப்பு

A.P.Mathan   / 2012 நவம்பர் 20 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த 5 தசாப்தங்களாக இலங்கை மக்களின் வாய்ச்சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை பல் வைத்திய சங்கம் மற்றும் ஸ்ரீலங்கா யுனிலீவர் நிறுவனம் என்பன இணைந்து கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் 'லிவ், லேர்ன், லாஃப்' திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 'லிவ், லேர்ன், லாஃப்' திட்டத்துக்கு சர்வதேச வாய்ச்சுகாதார சம்மேளனம் மற்றும் சர்வதேச யுனிலீவர் நிறுவனம் ஆகியன நிதியுதவிகளை வழங்கி வருகின்றன.

2006ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட 'லிவ், லேர்ன், லாஃப்' திட்டத்தின் வெற்றி காரணமாக, இரண்டாம் கட்ட 'லிவ், லேர்ன், லாஃப்' திட்டமானது ப்ளோரைட் அடங்கிய பற்பசை கொண்டு நாளொன்றுக்கு இரண்டு தடவை பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் வடமேல் மாகாணத்திலுள்ள சுமார் 150 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாளொன்றுக்கு இரண்டு தடவை ப்ளோரைட் அடங்கிய பற்பசை கொண்டு பல்துலக்குவதன் மூலம் ஈறுப்பிரச்சினைகள், வாய் சம்பந்தமான நோய்களை குறைத்துக்கொள்ள முடியும் என ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே வாய் சம்பந்தமான பிரச்சினைகளை இல்லாதொழித்து சிறந்த பலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக இத்திட்டத்தின் பிரதான பங்காளர்களாக செயற்படும் இலங்கை பல் வைத்திய சங்கம், யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனம், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியன நெருங்கிய தொடர்புடன் ஈடுபட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட 'லிவ், லேர்ன், லாஃப்' திட்டமானது ஏற்கனவே 50 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மேலும் 100 பாடசாலைகளில் உள்வாங்கப்படவுள்ள நிலையில், 2013ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் தலா 50 பாடசாலைகளைச் சேர்ந்த 2 குழுவினர் தெரிவு செய்யவுள்ளது. இத் திட்டத்திற்கு கல்வி அமைச்சின் போசாக்கு, சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் வாய்ச்சுகாதார சேவைகள் பிரிவின் பிரதி பொதுப் பணிப்பாளர் ஆகியோர் ஆதரவை வழங்குவதுடன், வடமேல் மாகாணத்தை சேர்ந்த மாகாண கல்வி பணிப்பாளர் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் திணைக்களம் போன்றன ஒருங்கிணைப்பாளராக செயற்படுகிறது.

இத்திட்டம் குறித்து திட்ட முகாமையாளரும், 'லிவ், லேர்ன், லாஃப்' திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆசிய பசுபிக் வாய்ச்சுகாதார சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் பிரசாத் அமரசிங்க கருத்து தெரிவிக்கையில்... 'வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் 'லிவ், லேர்ன், லாஃப்' திட்டமானது பாடசாலை சுகாதார சங்கங்களின் ஊடாக செயற்படுத்தப்படுகிறது. குருநாகல் பிராந்திய வாய்ச்சுகாதார பிரிவானது ஏனைய வாய்ச்சுகாதார சிகிச்சைகள், வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை வாய்ச்சுகாதார பயிற்றுநர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வாழ்நாள் முழுவதும் சிறந்த வாய்ச்சுகாதாரத்தை பேணுவதற்கு மக்களிடையே, விசேடமாக குழந்தைகள் மத்தியில் வாய்ச்சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை மேற்கொள்வது அவசியமானதாகும். 'சிறந்த வாய்ச்சுகாதாரத்தை பேண நாளொன்றுக்கு இரண்டு தடவை ப்ளோரைட் அடங்கிய பற்பசை கொண்டு பல்துலக்குவோம்' என்பது எமது தொனிப்பொருளாகும். பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் பழக்கவழக்கத்தை மாற்றியமைத்தல் போன்றன எமது பிரதான குறிக்கோளாகும்' என்றார்.

இலங்கை பல்வைத்திய சங்கத்தின் தலைவர் டொக்டர் சுரேஷ் சண்முகநாதன் கருத்து தெரிவிக்கையில்... 'இலங்கை பல்வைத்திய சங்கமானது நிபுணத்துவம் வாய்ந்த வாய்ச்சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் அனைத்து பங்காளர்களையும் ஒன்றிணைத்து இலங்கை மக்கள் மத்தியில் வாய்ச்சுகாதார விதிமுறைகளை மேம்படுத்தும் குறிக்கோளுடன் செயற்படுகிறது' என்றார்.

இத் திட்;டம் குறித்து சிக்னல் தயாரிப்பின் வர்த்தக நாம முகாமையாளர் மிஹிர குலதுங்க கருத்து தெரிவிக்கையில் 'யுனிலீவர் நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமமான சிக்னலானது 1982ஆம் ஆண்டு முதல் இலங்கை மக்கள் மத்தியில் சிறந்த வாய்ச்சுகாதார பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி புன்னகையை உறுதி செய்துள்ளது. நாம்; வாய்ச்சுகாதார சேவைகள், வாய்ச்சுகாதாரம் குறித்;த விழிப்புணர்வை ஏற்படுத்தல், சிறுவர்கள் மத்தியில் வாய்ச்சுகாதாரத்தை மேம்படுத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்து அக்கறை செலுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் இலங்கையருக்கு உறுதியான பற்களை பெற்றுக்கொடுப்பது என்ற நோக்கத்துடன், புதிய கண்டுபிடிப்புகள் ஊடாக உறுதியான மற்றும் ஆரோக்கியமான பற்களை உறுதிப்படுத்தி பல வகையிலான பற்பசைகளையும், பற்தூரிகைகளையும் வழங்கிவருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .