2025 ஜூலை 05, சனிக்கிழமை

தேயிலை ஏற்றுமதி மீதான வரி வாபஸ்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த தேயிலையின் மீதான செஸ் வரி அதிகரிப்பு, தொடர்ச்சியான பாதகமான ஊடக அறிவித்தல்களை தொடர்ந்து மீண்டும் வாபஸ் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை ஏற்றுமதியாளர் சம்மேளனம், இலங்கை தேயிலை விற்பனையாளர் சங்கம் போன்றன இணைந்து இந்த வரி அதிகரிப்பு குறித்த அரசின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஊடக அறிவித்தல்களை வெளியிட்டிருந்ததுடன், தேயிலைத்துறை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்தும் பெருந்தோட்டத்துறை அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தன.

இதனை தொடர்ந்து, இந்த வரி அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீள பெற்றுக் கொள்வது தீர்மானத்தை பெருந்தோட்டத்துறை அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .