Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
A.P.Mathan / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ச.சேகர்
கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்களில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகிய பங்குகள் அதிகளவு தாக்கத்தை வெளிப்படுத்தியிருந்தன. கடந்த வாரம் இரு தினங்கள் விடுமுறை காரணமாக பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. இதன் காரணமாக பங்குச்சந்தை மீது பங்கு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோரின் ஆர்வமும் சரிவடைந்திருந்ததாகவும், மீண்டும் அடுத்து வாரங்களில் பங்குச்சந்தை வழமைக்கு திரும்பும் என தாம் எதிர்பார்ப்பதாக பங்குச்சந்தை முகவர்கள் தெரிவித்திருந்தனர். வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,162.75 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3958.93 ஆகவும் பதிவாகியிருந்தன.
பெப்ரவரி 02ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 5,717,464,483 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 23,087 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 20,585 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,502 ஆகவும் பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் மீதான விலைச்சரிவுடன் புரள்வு பெறுமதி 1.3 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் பீபிள்ஸ் லிசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு என்பது அக்சஸ் என்ஜினியரிங், யூனியன் வங்கி மற்றும் வலிபல் பவர் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு லங்கா ஐஓசி, கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
வியாழக்கிழமை
டயலொக் ஆக்சியாடா, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் போன்றவற்றின் மீதான விலை உயர்வுகளின் காரணமாக அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன நேர் பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 2.3 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், டயலொக் ஆக்சியாடா மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வலிபல் பவர் எரத்னா, சியெரா கேபிள்ஸ் மற்றும் பிரமல் கிளாஸ் பங்குகளின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. இதேவேளை, வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர். மொத்த வெளிநாட்டு கொள்வனவு புரள்வு பெறுமதியில் 77 சதவீத பங்களிப்பை செலுத்தியிருந்தது.
வெள்ளிக்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் கார்சன்ஸ் கம்பர்பெட்ச் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர்பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 2.0 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகியவற்றின் மீது உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு பதிவாகியிருந்தது. டயலொக் அக்சியாடா, பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் பிரமல் கிளாஸ் ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. சிறியளவிலான ஈடுபாடு சியெர்ரா கேபிள்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் வொரன்ட்கள் 23 மற்றும் லங்கா ஐஓசி ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டிருந்தனர்.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஸ்டான்டர்ட் கெப்பிட்டல், எஃவ்எல்சி ஹைட்ரோ பவர், சீகிரிய விலேஜ், வலிபல் மற்றும் செரண்டிப் என். குரூப் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
பிசி ஹவுஸ், சுவதேஷி, ப்ளு டயமன்ட்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (உரிமை) மற்றும் மொரிசன்ஸ் (சாதாரண) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 46,500 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 44,800 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. தங்கத்தின் விலையில் சற்று உயர்ந்த பெறுமதிகள் பதிவாகியுள்ளதாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது,
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 134.72 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 203.86 ஆக காணப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
56 minute ago
3 hours ago
4 hours ago