2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

அதிக அன்பையும் கருணையையும் பரப்பிய எம்பார்க்

A.P.Mathan   / 2015 ஜூலை 30 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் புவியியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மாறுபட்ட பல இடங்களில் எம்பார்க் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மிருக நலனில் ஆர்வம் கொண்ட ஒரு உன்னதமான நவ நாகரிக உற்பத்திகளின் பிரபலமான வர்த்தக முத்திரையே எம்பார்க் என்ற நாமமாகும். அதன் எட்டு வருட வரலாற்றில் இவ்வாண்டின் அதன் சுறுசுறுப்புமிக்க முதல் காலாண்டில் தான் அது மிகப் பெரும் சேவைகளைப் புரிந்து சாதனை படைத்துள்ளது.

சீகிரிய, அருகம் பே, யால, கண்டி, கம்பளை, சிலாபம், சன நெரிசல் மிக்க கொழும்பின் புற நகர் பகுதிகளான மகரகம, கடுவலை. கந்தானை, மற்றும் வெலிசறை ஆகிய இடங்களில் எம்பார்க் அதன் பங்காளி அமைப்புக்களுடன் இணைந்து 2015 ஏப்பிரல் முதல் ஜுன் வரையான காலப்பகுதியில் 2592 கட்டாக்காளி நாய்களுக்கு தடுப்பு ஊசிகளை ஏற்றியுள்ளது. 1458 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 51 நாய்கள் புதிய பாதுகாப்பான வளர்ப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

'ஒரு நல்ல காரியத்துக்காக எம்மோடு கைகோர்த்து செயற்பட்டதன் பலனை இந்தத் திட்டத்தில் உதவிய உள்ளுர் சமூகங்களும் அதிகாரிகளும் நாடு முழுவதும் தற்போது உணரத் தொடங்கியுள்ளமை எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது' என்று கூறினார் எம்பார்க் நிறுவுனரும் தொழில் அதிபருமான ஒடாரா குணவர்தன. 'நம் மத்தியில் உயிர் வாழும் இந்த ஜீவன்களின் விடயத்தில் மேலும் பலர் அன்பும் கருணையும் காட்டத் தொடங்கியுள்ளமை மட்டில்லா மகிழ்ச்சி அளிக்கின்றது.'என்று அவர் மேலும் கூறினார்.

ஏம்பார்க் தனது இந்த உன்னதமான பணியை நான்கு அம்ச பிரசாரங்களின் கீழ் மேற்கொண்டு வருகின்றது. விசர் நாய் தடுப்பு மருந்தேற்றல் மற்றும் இனப் பெருக்க கட்டுப்பாடு, தாபரிப்பு மற்றும் வளர்ப்பிடங்கள் பெற்றுக் கொடுத்தல், விஷேட தேவை உள்ள மற்றும் காயம் அடைந்த வீதி ஓர மிருகங்களுக்கு சிகிச்சை அளித்தல், மற்றும் இது தொடர்பான அறிவூட்டலும் விழிப்புணர்வும் என்பனவே எம்பார்க்கின் பிரதான பிரசாரத் திட்டங்களாகும். வீதி நாய்கள் பற்றிய பொது மக்களின் சிந்தனைப் போக்கிலும், அனுகு முறையிலும்; மாற்றங்களை ஏற்படுத்துவதே எம்பார்க்கின் பிரதான நோக்கமாகும். சமூகத்தில் காணப்படும் மிருகங்களோடு தொடர்பினை ஏற்படுத்தும் நடைமுறை சாத்தியமான அனுகு முறைகள் மூலம் இது எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வடிவங்களிலான மிருக சித்திர வதைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தரங்களின் பிரகாரம் மிருகங்களைப் பிடித்து கருத்தடை செய்து விடுவிக்கும் முறை தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் மூலம் அமுல் செய்யப்படுகின்றது. நன்கு பயிற்றப்பட்ட மிருக வைத்தியர்கள் இதில் ஈடுபடுகின்றனர். நாய்களைப் பிடிக்கும் விடயத்திலும் அந்த துறைசார் நிபுணர்களின் மேற்பார்வையுடன் அவை பிடிக்கப்பட்டு மருந்து ஏற்றப்பட்டு எந்த விதமான நோவினையும் தீங்கும் ஏற்படாமல் அவை மீண்டும் பத்திரமாக விடுவிக்கப்படுகின்றன.

எம்பார்க்கின் நான்காவது கட்ட திட்டம் சீகிரியவில் அண்மையில் இடம்பெற்றது. மே மாத்தில் இங்கு 312 நாய்களுக்கு கருத்தடை; சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 403 நாய்களுக்கு தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது. அதேபோல் ஜுன் மாதத்தில் மகரகமையில் இடம்பெற்ற தொடர் வேலை திட்டத்தில் 917 நாய்களுக்கு தடுப்பு மருந்துகள் ஏற்றப்பட்டன.

இவ்வாண்டு மே மாதத்தில் எம்பார்க் அதன் எட்டாவது வருடத்தை கொண்டாடிய போது இந்தத் திட்டங்கள் மூலம் ஏற்கனவே 14183 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சைகளும், 12536 ஏனைய சிகிச்சைகளும், 33901 தடுப்பு மருந்து ஏற்றலும் பூர்த்தி செய்யப்பட்டு 2105 நாய்களுக்கு வளர்ப்பிடங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்தத் திட்டங்கள் தற்போது கணிசமான சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளன. பிரான்ஸில் உள்ள முன்னணி மிருகப் பாதுகாப்பு அமைப்பான பிரிஜிட் பார்டொட் மன்றம் (Brigitte Bardot Foundation) இதற்கென நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. மேலும் பொமோஸா (Bomosa Foundation) மன்றம் வழிகாட்டுதல்களையும் பயிற்சிகளையும் கோரியுள்ளது. இதேவேளை இலங்கையில் மிருக நலன் மேம்பாட்டின் அவசியத்தை உணர்ந்துள்ள உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டத்தில் தனிநபர்கள் பலரும் உதவி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .