2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் தேசிய வைத்தியசாலை இயற்கை பொலிவூட்டும் செயற்திட்டம்

A.P.Mathan   / 2015 ஜூலை 30 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அரை ஏக்கர் பூங்கா பிரதேசத்தை செப்பனிடும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

இவ்விரு நிறுவனங்களையும் சேர்ந்த அதிகாரிகள் இந்த பூர்த்தி செய்யப்பட்ட வேலைகளை அண்மையில் இணைந்து பார்வையிட்டனர். இந்த திட்டத்தில் கொமர்ஷல் வங்கியின் பங்களிப்பை பாராட்டும் வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஒரு நினைவுச் சின்னம் ஒன்றையும் கையளித்தது. 

கொமர்ஷல் வங்கியின் நிதியின் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட இந்தப் பணியை அதிகாரிகள் பார்வையிடுவதை படத்தில் காணலாம். (கீழே) வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அணில் ஜயசிங்க (வலமிருந்து இரண்டாவது) கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்கவுக்கு நினைவுப் பரிசை வழங்குவதை காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .