2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

2017இன் முதற் காலாண்டில் கொமர்ஷல் வங்கி சிறந்த வளர்ச்சி

Editorial   / 2017 மே 31 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி 2017இல் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2017 மார்ச் 31இல் முடிவடைந்த முதலாவது நிதி காலாண்டில், திடமான வருமானம் மற்றும் இலாப வளர்ச்சி என்பனவற்றை அது பதிவு செய்துள்ளது. இது எல்லைகளை மேலும் குறைத்து வரி விதிப்பில் கணிசமான அதிகரிப்பை காட்டியுள்ளது. 

VAT மற்றும் NBT வரிகளுக்கு முந்திய இலாபமாக ரூ. 6.341 பில்லியன் பதிவாகியுள்ளது. 2016இன் முதற் காலாண்டை விட இது 17.93% வளர்ச்சியை காட்டுகின்றது. இதேவேளை, இந்த மூன்று மாத காலத்துக்கான VAT மற்றும் NBT வரிகள் 40.33 சதவீதமாக அதிகரித்து ரூ. 1.119 பில்லியன்களாகக் காணப்பட்டது. வரிகள் அதிகரிப்பு மற்றும் குறிப்பிட்ட காலப்பகுதியில் இலாபம் அதிகரிப்பு என்பனவே இதற்கு காரணம். 

இதன் விளைவாக குறிப்பிட்ட காலாண்டில் வரிக்கு முந்திய இலாபம் குறைந்த வீதமான 14.03ஆல் அதிகரித்து ரூ. 5.222 பில்லியன்களாகக் காணப்பட்டது. அதேவேளை, வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 3.775 பில்லியன்களாக உள்ளது. இது 16.73 சதவீதமாகும். ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட மூன்று மாத மீளாய்வு காலத்தில் வங்கி ரூ. 2.565 பில்லியன்களை வரியாகச் செலுத்தியுள்ளது. இது இதற்கு முந்திய ஆண்டின் இதே காலாண்டை விட 19.73 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டின் நிதிகள் செலவு அதிகரிப்போடு இணைந்து எல்லைகளின் குறைப்புக்கு வழிவிட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X