2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சியடையும்: மத்திய வங்கி

Super User   / 2012 நவம்பர் 08 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன் 12.30 மணியளவில், இலங்கையின் பொருளாதாரம் 2013 இல் 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறை மற்றும் நாணய கொள்கைகள் பொருத்தமானதாக மாற்ற அமைக்கப்படுவதோடு யூரோ வலயத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்படும் நிச்சமயற்ற தன்மை குறைவடைவதனாலும் உலக பொருளாதார மீட்சியும் 2013 இல் நடைபெறும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கவனமான நாணய, இறை கொள்கையோடு உள்நாட்டு நிரம்பல் நிலைமைகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியன இணைந்து 2013ஆம் ஆண்டில் பண வீக்கத்தை ஒற்றை இலக்க மட்டத்தில் பேணும் என மத்திய வங்கி கருத்து தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .