Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை சந்தித்து, வாழ்த்தி அவர்களுடன் பகலுணவு உண்ணும் மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம் ஒன்றை AIA வெல்த் பிளேனர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பெற்று மகிழ்ந்தனர்.
தமது அலைபேசிகள், புகைப்படக் கருவிகள் (கமெராக்கள்) மற்றும் ஐ-பாட்களுடன்( i-pads) தயாராக இருந்த அதிர்ஷ்டசாலி வெல்த் பிளேனர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களுக்கு இயலுமானளவு 'செல்ஃபி (selfie) புகைப்படங்களை எமது தேசிய நட்சத்திரங்களுடன் எடுத்து மகிழ்ந்ததுடன் வீரர்களுடன் நேரடி உரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
விசேடமாக சிறுவர்கள் AIA பரிசளித்த சிறிய கிரிக்கெட் மட்டைகளில் தமது விருப்பத்திற்குரிய கிரிக்கெட் வீரரின் கையொப்பத்தைப் பெறுவதில் பெரிதும் ஆர்வம் காட்டினர்.இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வப் பங்;காளராக AIA திகழ்வதன் காரணமாக இந்த அரிய சந்தர்ப்பத்தை AIA வெல்த் பிளேனர்களும் அவர்களின் குடும்பங்களும் பெற்றுக் கொண்டனர். எமது முகவர்களுக்கு மறக்க முடியாத தனித்துவமான தருணம் ஒன்றை வழங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
எமது வணிகத்தில் அவர்கள் வகிக்கும் முக்கியப் பங்களிப்பை நாம் அறிந்திருப்பதே இதற்குக் காரணமாகும்' என சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி சுரேன் பெரேரா தெரிவித்தார். 'தமக்கு நெருக்கமானவர்களுடன் மேலும் நெருங்குவதற்கு உதவும் விதமான எமது தற்போதைய வணிகநாமப் பிரச்சாரமான 'நிஜமாக நெருங்குங்கள்' தொனிப்பொருள் எமது முகவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் விசேடமாக கிரிக்கெட்டை நேசிக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் பொருந்தும். மேலும் தமக்கு விருப்பமான கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு நெருக்கமாகி வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றிட இது அவர்களுக்கு வாய்ப்பு ஒன்றையும் வழங்கியிருந்தது' என அவர் மேலும் தெரிவித்தார்.
29 minute ago
36 minute ago
48 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
48 minute ago
58 minute ago