2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

Audi உடன் Drive One

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் Audi வாகனங்களின் விநியோகத்தினை பொறுப்பேற்ற Drive One (Pvt) Ltd நிறுவனம் Audi வாகன நாமத்தினை இலங்கையின் உச்சத்திற்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

Audi AG Germany பாகங்களுக்கான உத்தியோகபூர்வ பிரதிநிதியாக (Accessories) பாகங்களுக்கான உத்தியோகபூர்வ பிரதிநிதியாக Drive One (Pvt) Ltd இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ளது.  

Drive One (Pvt) Ltd, நிர்வாக இயக்குனர் ஹிரான் டி சில்வா “மிகவும் பெருமைக்குரிய Audi வணிகநாமத்தை இலங்கையில் பிரதிசெய்வதையிட்டு Drive One நிறுவனம் ஆனந்தமடைகின்றது. எமது வாடிக்கையாளர்களே எமது பிரதான நோக்கு என்பதுடன் அவர்களுடன் நீண்டகால உறவை சிறப்பான சேவை ஊடாக கட்டியெழுப்புகின்றோம். 2020 ஆண்டளவில் தேசத்தின் சிறந்த மோட்டார் வாகன நாமமாக Audi ஐ மாற்றும் அர்ப்பணிப்புடன் Drive One நிறுவனம் செயற்படுகின்றது” என தெரிவித்தார்.  

Drive One அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விற்பனைக்கு பிந்திய சேவையை வழங்குகின்றது. விற்பனைக்கு பிந்திய மற்றும் தொழில்நுட்ப உதவி சேவைகள் உட்பட Audi AG’s top diagnostic information systems தகவல் மையத்திற்கான அனுமதியை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

அதாவது Drive One தொழில்நுட்ப அணிக்கு வாகனத்தின் பராமரிப்பு விபரம், வேலைத்தள குறிப்பேடுகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், மென்பொருள் மேம்படுத்தல், பராமரிப்பு இலக்குகள் ஆகிய தகவல்களை தமது நிறுவனத்தின் ஊடாக மட்டும் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்க முடியும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X