2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நத்தார் பண்டிகைக்காக ஆர்பிகோ முன்னெடுக்கும் 'Arpico Christmas Millionaire' திட்டம்

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த ஆண்டு நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு அதிக பெறுமதியான அன்பளிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்த இலங்கையின் மிகப்பெரிய சுப்பர் மார்க்கட் தொடரான ஆர்பிகோ சுப்பர் சென்டரின் மூலம் இம்முறை நத்தார் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு இலட்சாதிபதிகள் பலரை உருவாக்கிடும் 'Arpico Christmas Millionaire' திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

2011 நவம்பர் 15ஆம் திகதி முதல் 2012 ஜனவரி 8ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் இந்த திட்டத்தின் மூலம் வாராந்தம் ஒரு இலட்சாதிபதி தெரிவு செய்யப்படுவதுடன், மேலும் பல அன்பளிப்பு வவுச்சர்கள் தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக 2011 டிசெம்பர் 1ஆம் திகதி முதல் டிசெம்பர் 31ஆம் திகதி Soniq தொலைக்காட்சியை நாளாந்தம் வெற்றி கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 'Arpico Christmas Millionaire' திட்டத்தில் பங்குகொண்டு வாடிக்கையாளர்கள் வெற்றிபெறுவதற்கு செய்ய வேண்டியது, வழமையை போலவே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள  பொருட்களில் இருந்து 3 பொருட்கள் உள்ளடங்கலாக 3000 ரூபா அல்லது அதற்கு அதிகமான பெறுமதியுள்ள பொருட்களை கொள்வனவு செய்வதாகும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொள்வனவின் போதும் இந்த திட்டத்துக்கு தெரிவாவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்படும்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 'Arpico Christmas Millionaire' திட்டம் குறித்து றிச்சர்ட் பீரிஸ் டிஸ்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அண்ட்ரூ டால்பி கருத்து தெரிவிக்கையில், 'வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய ஹைபர்மார்க்கெட் விற்பனை முறையை இலங்கையில் அறிமுகம் செய்த ஆர்பிகோ சுப்பர் சென்டர் மூலம் இந்நாட்டின் சொப்பிங் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடிந்திருந்தது. அத்துடன் வாடிக்கையாளர்களின் வரவேற்பும் சிறந்த முறையில் அமைந்திருந்தது. எமது சுப்பர் சென்டர்களின் அறிமுகத்தின் மூலம் இன்று எமது வாடிக்கையாளர்கள் ஷொப்பிங் செய்ய வருவது பொருட்களை கொள்வனவு செய்ய மாத்திரமன்று, களிப்பையும் சுவாரஸ்யமான அனுபத்தையும் பெற்றுக்கொள்ளவாகும். இதன் மூலமாக எம்மீது நம்பிக்கை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். கடந்த ஆண்டு எமது நத்தார் பரிசுப் பொருட்களில் முதலாமிடத்துக்காக சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வாகனம் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை அந்த பெறுமதியை கடந்து இலட்சாதிபதிகள் ஏழு பேரை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதுபோன்று எமது உயர்ந்த சேவையை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றடையக்கூடிய வகையிலான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்ட வண்ணமுள்ளோம்' என்றார்.

ஆர்பிகோ சுப்பர் சென்டர்களின் மூலம் இம்முறை நத்தார் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நத்தார் அலங்கார பொருட்கள், விளையாட்டு பொருட்கள், உணவுப் பண்டங்கள், அன்பளிப்பு பொருட்கள் மற்றும் நத்தார் பண்டிகைக்கு அவசியமான மேலும் 2000இற்கும் அதிகமான பொருட்களுக்கு 30 வீதம் வரை விலைக்கழிவு வழங்கப்படவுள்ளது. மேலும், இம்முறை பண்டிகைக்காலப் பகுதியில், ஆர்பிகோ சுப்பர் சென்டர்களின் மூலம் மட்டும் கொள்வனவு செய்யக்கூடிய விசேட பொருட்கள், நத்தார் அலங்கார பொருட்கள், அன்பளிப்பு பொருட்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் லினன் போன்ற பொருட்கள் பலவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X