2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

'Nostalgie03 – the Eiffel Tower Unplugged' கண்காட்சி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஊடகத்துறை ஆளுமையான குமார் டி சில்வாவின் 'Nostalgie03 – the Eiffel Tower Unplugged' எனும் கறுப்பு - வெள்ளை புகைப்பட கண்காட்சிக்கு இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர் மேன்மைதங்கிய ஜீன்-போல் மொனச்சாஉ மற்றும் பிரன்கொய்ஸ் மொன்ச்சாஉ அம்மணி ஆகியோர் பிரதம அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.  
 
அலையன்ஸ் பிரான்சைஸ் டி கோட்டே நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சியானது பரிஸ் நகரத்தின் மாறிக் கொண்டேயிருக்கின்ற வர்ண ஒளியின் பின்புலத்தில் ஈபிள் கோபுரத்தின் வேறுபட்ட பார்வைக் கோணங்களில் தோன்றும் காட்சிகளை புகைப்படப்பிடிப்பாளரின் கண்களூடாக காணும் வகையிலமைந்த முப்பது புகைப்படங்களை சித்தரிக்கும் விதத்தில் காணப்பட்டது. இந்நிகழ்வுக்கு கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், திருமதி இராங்கனி சேரசிங்க மற்றும் பலர் என புகழ்பெற்ற பிரபலங்கள் உள்ளடங்கலாக பெருந்திரளான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.
 
'இலங்கையில் ஒரு மதிப்புமிக்க அறிவு புகட்டுனராகவும் அதேபோன்று கலைஞராகவும் திகழ்பவர் என்ற வகையில். மானிட புத்திக்கூர்மையின் ஒரு தலையாய பண்பை கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் எமக்கு இதுபோன்றதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக குமார் டி சில்வாவுக்கு நாம் மிகவும் நன்றி தெரிவிக்கின்றோம்' என்று கொழும்பிலுள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் டி கோட்டே நிலையத்தின் பணிப்பாளர் அலெக்ஸாண்டர் மார்டினஸ் தெரிவித்தார்.
 
இல:18, கொனிஸ்டன் பிளேஸ், கொழும்பு – 7 என்ற முகவரியில் அமைந்துள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் டி கோட்டே நிலையமே கொழும்பு மற்றும் கொழும்பு பெரும்பாக பகுதிகளில் இயங்கும் இவ்வாறான ஒரேயொரு பிரெஞ்சு மொழி மற்றும் காலாசார மையமாக காணப்படுகின்றது. பாரிஸ் நகரிலுள்ள பவுண்டேசன் அலையன்ஸ் பிரான்சைஸ் டி கோட்டே உடன் ஒன்றிணைந்து செயற்படும் இந்நிலையயமானது, பிரான்ஸ் அரசாங்கத்தினதும் இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தினதும் முழுமையான ஆதரவுடன் இயங்கி வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--