2021 மார்ச் 04, வியாழக்கிழமை

4rever Skin Naturalsக்கு 'வளர்ந்து வரும் வர்த்தக நாமம்' விருது

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேர்ள்ட் பிரான்ட் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 25ஆவது சர்வதேச வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், 'வளர்ந்து வரும் வர்த்தக நாமம்' விருதை 4rever வெற்றியீட்டியுள்ளது. இந்நிகழ்வு 2016 ஏப்ரல் 11ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது.

குறுகிய காலப்பகுதியில் இலாபப் பெறுமதியுடன், மிகச் சிறந்த வினைத்திறனை பதிவு செய்வதுடன், வேகமான வளர்ச்சியை பதிவு செய்திருந்த நிலைபேறான வர்த்தக நாமத்துக்கு சர்வதேச மட்டத்தில் கௌரவிக்கும் வகையில் 'வளர்ந்து வரும் வர்த்தக நாமம்' விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறது. இன்றை போட்டிகரத்தன்மை நிறைந்த வர்த்தக நாமங்கள் சந்தைப்படுத்தல் செயற்பாடுகள் நடைபெறும் சூழலில், 4rever என்பது துறையில் சிறந்த பெறுபேறுகளை குறுகிய காலப்பகுதியில் பதிவு செய்த வண்ணமுள்ளது.

வேர்ள்ட் பிரான்ட் காங்கிரஸ் என்பது உலகளாவிய ரீதியில் அதிகளவு நாடப்படும் வர்த்தக நாமங்களின் பின்புலத்தில் இயங்கும் நிபுணர்கள் குழுவினால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பாக திகழ்கிறது. இந்தக் கழகத்தில் 500க்கும் மேற்பட்ட வர்த்தக நாம மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர் இவர்கள் வௌ;வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், உலகின் வௌ;வேறு பகுதிகளில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

4rever இனால் அண்மையில் பெறப்பட்ட இந்தச் சாதனை என்பது இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச ரீதியில் வர்த்தக நாமத்தின் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளில் அணியினர் காண்பித்த சிறப்பான செயற்பாடுகளுக்கான அங்கிகாரமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற சர்வதேச வர்த்தக நாமங்களுடன் போட்டியிட்டவாறு உள்நாட்டுச் சந்தையில் 4rever வலிமையான நிலையை பேணிய வண்ணமுள்ளது. சர்வதேச ரீதியில் 4rever வர்த்தக நாமம் தனது செயற்பாடுகளை அடுத்த கட்டமாக விஸ்தரிப்பதற்குரிய அடித்தளமாக இது அமைந்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் இயற்கையாகவே பெறப்பட்ட பெறுபேறுகளைத் தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் 4rever தனது செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராகிய வண்ணமுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி அவுஸ்திரேலியாவிலும் 4reverதயாரிப்புகள் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .