2021 மே 06, வியாழக்கிழமை

SLS சான்று மூலம் சமபோஷ தயாரிப்பின் உயர்ந்த தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான பிளென்டி பூட்ஸ் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான சமபோஷ தயாரிப்புகளுக்கு SLS தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தானிய உணவு தயாரிப்புக்கு SLS தர சான்றிதழ் கிடைத்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பிளென்டி பூட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் சமபோஷ தயாரிப்புகள் எப்போதும் உயர் தரத்துக்கு அமைவாக அமைந்துள்ளன.

நம்நாட்டின் 10,000இற்கும் அதிகமான விவசாயிகளின் விளைச்சல்களின் மூலம் கிடைக்கும் பயறு, சோளம், சோயா அவரை மற்றும் அரிசி போன்றவற்றை கொண்டு சமபோஷ தயாரிக்கப்படுகிறது. பள்ளேகல பகுதியில் அமைந்துள்ள பிளென்டி பூட்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையில் முற்றும் முழுதாக இயந்திர சாதனங்களின் மூலம் மனித வளங்களின்றி தயாரிப்பிலிருந்து பொதியிடல் வரை சகல செயற்பாடுகளும் உயர் தரங்களுக்கமைவாக சுகாதாரமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

விவசாயிகளிடமிருந்து தானியங்களை பிளென்டி பூட்ஸ் நிறுவனம் உடன்படிக்கையின் அடிப்படையில் கொள்வனவு செய்கிறது. இதன் காரணமாக சந்தையில் தானியங்களின் விலை வீழ்ச்சியடையும் போது கூட விவசாயிகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாகவே விலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் எவ்வித ஐயமுமின்றி தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும்.

ளுடுளு தரச் சான்றிதழ் கிடைத்தமை குறித்து பிளென்டி பூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான ஷம்மி கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில்..

'இந்நாட்டின் மந்த போசாக்கை நிவர்த்தி செய்யும் வகையில் சமபோஷ தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதனை இலக்காக கொண்டு ஆரம்பம் முதலே சமபோஷ உயர் தரத்தில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. சமபோஷ தயாரிப்புகளுக்கு தமது உற்பத்திப் பொருட்களை வழங்கும் விவசாயிகளுக்கும் சிறந்த வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம். 1996ஆம் ஆண்டு 70 விவசாயிகளுடனும், 50 ஏக்கர் விவசாய நிலத்தில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்த பிளென்டி பூட்ஸ் நிறுவனம் தற்போது 15,000இற்கும் அதிகமான விவசாயிகளை கொண்டுள்ளது. வருடாந்தம் இந்த விவசாயிகளிடமிருந்து விளைச்சல்களை கொள்வனவு செய்வதற்கு 650 மில்லியன் ரூபாவை செலவிடுகிறது' என்றார்.

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் பணிப்பாளரும் விற்பனை மற்றும் விநியோக பிரிவின் பொறுப்பதிகாரியுமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில்...

'சிபிஎல் குழுமத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தயாரிப்புகளின் தரமும் உயர்ந்த நிலையில் பேணப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பெருமளவானோருக்கு தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே உதைபந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 13 வயதுக்குட்பட்ட தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு சமபோஷ அனுசரணை வழங்கி வருகிறது' என்றார்.

2 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளேகல சமபோஷ தொழிற்சாலையின் மூலம் வருடாந்தம் சமபோஷ பொதிகள் 40 – 50 மில்லியன் வரை தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .