2024 மே 03, வெள்ளிக்கிழமை

இலங்கையிலிருந்து நிறுவனங்கள் வெளியேற்றம்

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை உற்பத்தி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமையகங்களை சிங்கப்பூருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெருமளவு வரி விதிப்பு மற்றும் நாட்டில் தற்போது பொதுவாக காணப்படும் வியாபாரச் சூழல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானங்களை இந்நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

பாரிய மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மாத இறுதியில் தமது நிறுவனத்தின் தலைமையகத்தை சிங்கப்பூருக்கு மாற்றுவதாக தெரிவித்திருந்தார். “சிங்கப்பூரில் வியாபாரத்தை மேற்கொள்வது இலகுவானதாக அமைந்துள்ளதாக நாம் உணர்கிறோம். குறிப்பாக புதிய வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, எமது கணக்குகளை பேணி வருவதில் நாம் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம். இந்நிலையில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியான சூழல் காரணமாக கொழும்பிலிருந்து வெளியேற நாம் தீர்மானித்துள்ளோம்” என்றார்.  

ஆடைத்தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் குறிப்பிடுகையில், “நாட்டில் தற்போது காணப்படும் இந்த அரசியல் நெருக்கடி காரணமாக ஜிஎஸ்பி+ சலுகை இல்லாமல் போகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 
அடுத்த மாத முற்பகுதியில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் வெளியாகும் என நாம் எதிர்பார்க்கிறோம். எனவே, நாம் எமது தலைமையக செயற்பாடுகளை சிங்கப்பூருக்கு மாற்ற தீர்மானித்துள்ளோம்” என்றார்.   

அரசியல் உறுதியற்ற நிலை பல நிறுவனங்களை பாதித்துள்ளன. குறிப்பாக இக்கால கட்டத்தில் இடம்பெறும் பணிப் பகிஷ்கரிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஊழியர்களின் கவனம் திசை திருப்பப்படுகின்றது. இதனால் வியாபாரங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .