2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புகழ்பெற்ற பால் உற்பத்தியாளரான Pelwatte Dairy Industries,   நுகர்வோர் செலுத்தும் பணத்துக்கான பெறுமதியை வழங்கும் பல அற்புதமான தள்ளுபடிகளை இலங்கையின் முன்னணி சுப்பர்மார்க்கெட்களில் இந்த செப்டம்பரில் வழங்குகின்றது.

இந்த உள்நாட்டு நிறுவனமானது பால், யோகட், ஐஸ் கிரீம் மற்றும் பட்டர் - உப்பு சேர்க்கப்பட்ட, சேர்க்கப்படாத அத்தோடு வீடு, நிறுவன பாவனைக்கானவை அடங்கலான அதன் ஆரோக்கியமான, புதிய மற்றும் சுவையான தயாரிப்புகளுக்காக கொண்டாடப்படுகின்றது.

மேலும் அனைத்து தரப்பு மக்களது தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு வர்த்தகநாமமாக Pelwatte Dairy தொடர்ந்து உயர் தரமான பால் தயாரிப்புகளை அனைத்து இலங்கையர்களுக்கும் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கிறது.

எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதில் எமது நிறுவனம் எப்போதும் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், Pelwatte Dairy தனது தயாரிப்புகளுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது.

Keells விற்பனை நிலையங்களில் 200g உப்பு சேர்க்கப்பட்ட பட்டர்களுக்கு ரூபா 60 மற்றும் Arpico விற்பனை நிலையங்களில் 200g உப்பு சேர்க்கப்படாத பட்டர்களுக்கு ரூபா 41 தள்ளுபடிகளும், செப்டம்பர் 15 முதல் ஒக்டோபர் முழுவதும் வழங்கப்படவுள்ளன.

கொஸ்வத்தை Sirilak SUPERஇற்கு விஜயம் செய்யும்  வாடிக்கையாளர்கள் ஐஸ் கிரீம் தவிர்த்து ஏனைய அனைத்து குளிரூட்டப்பட்ட Pelwatte தயாரிப்புகளுக்கும், அவற்றின் மொத்த சில்லறை விலையில் 10% தள்ளுபடியை செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையும், மற்றும் ஒக்டோபர் மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், எமது அனைத்து குளிரூட்டப்பட்ட தயாரிப்புகளும் SPAR மற்றும் Softlogic சுப்பர்மார்க்கட்டுக்களில் கிடைப்பதுடன், எமது ஐஸ் கிரீம் தயாரிப்பு வரிசையானது  Sathosa சுப்பர்மார்க்கட்டுக்களில் கிடைக்கின்றது. Pelwatte Dairyஇன் முழு ஆடைப்பால்மா மற்றும் கொழுப்பற்ற பால்மா உள்ளடங்கலாக பால்மா தயாரிப்பு வரிசையானது அனைத்து Keells விற்பனை நிலையங்களிலும் கிடைக்கின்றது.

Pelwatte யோகட் சுக்ரோஸ், பால் திடப்பொருள்கள், பால் கொழுப்பு, ஜெலட்டின், வெண்ணிலா சுவை, அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் மற்றும் யோகர்ட் வளர்ப்பூடகம் போன்ற ஒரு சில பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், இது சந்தையில் கிடைக்கும் ஆரோக்கியமான தெரிவுகளில் ஒன்றாகும்.

Pelwatte Dairy அதன் செழுமையான, இயற்கையான மற்றும் கிரீம் தன்மை கொண்ட பட்டருக்காகவும் நன்கு அறியப்படுகிறது. இது விசேடமாக தயாரிக்கப்படுவதுடன், நுகர்வோருக்கான மிகவும் ஆரோக்கியமான தெரிவாகும்.

அனைத்து Pelwatte தயாரிப்புகளும் செழுமையான புதிய பாலின் ஊட்டச்சத்தினால் வளப்படுத்தப்படுவதுடன்,  காப்புப்பொருள்கள் எதுவும் உபயோகிக்கப்படுவதில்லை. சிறிய நகரமான புத்தளவைச் சுற்றியுள்ள புல்வெளிகளிலிருந்து இதற்கான பாலானது நேரடியாக கிடைக்கிறது.

"நுகர்வோரின் நம்பிக்கையும், திருப்தியும் எப்போதும் எங்களுக்கு முதன்மையானதாக இருந்து வருகிறது. மேலும், Pelwatte Dairy Industries அந்த நம்பிக்கையை வளர்ப்பதில் எப்போதும் அதிக கவனம் செலுத்தி வருவதோடு, அர்ப்பணிப்புடனும் உள்ளது. ஒரு நிறுவனம் இந்த நம்பிக்கையை உண்மையிலேயே அடையக்கூடிய ஒரே வழி, அதன் நுகர்வோருக்கு சிறந்த பெறுமதியை உருவாக்குவதே ஆகும்.

Pelwatte Dairy உம் இதனையே செய்து வருகின்றது. எங்கள் தயாரிப்புகளில் வலுவாக பிரதிபலிக்கும் தரம், சுவை மற்றும் ஆரோக்கியத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச பெறுமதியை நாங்கள் வழங்குகிறோம். அதுவே நமது வளர்ச்சியை தூண்டுகின்றது," என Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர், அக்மால் விக்ரமநாயக்க தெரிவித்தார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முடக்கல் நிலையின் போது இந் நிறுவனம் அதன் பங்களிப்புக்காக பெரிதும் பாராட்டப்பட்டது, இலவசமாக வீட்டுக்கு வீடு விநியோக சேவையை வழங்கியதுடன், தொற்றுநோயை சமாளிக்க தேசத்திற்கு உதவ பல சமூக பொறுப்புணர்வு மற்றும் நுகர்வோர் அணுகல் திட்டங்களையும் முன்னெடுத்தது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருந்த காலப்பகுதியிலும் பால் உற்பத்தி தொடர்வதை உறுதி செய்ய தீவிர பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மொத்தத்தில், பால் உற்பத்தியில் இலங்கையை தன்னிறைவு பெறச் செய்யும் தொலைநோக்கு பார்வையுடன் Pelwatte Dairy Industries இயங்கி வருவதுடன், நாட்டில் பால் விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றது. மேலும், உள்நாட்டு பொருளாதாரத்தை உள்நாட்டு தயாரிப்புகளால் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளதோடு, தேசத்தை மாற்றும் தனது நோக்கத்தில் உறுதியாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--