2021 மார்ச் 03, புதன்கிழமை

எயார்டெல்லினால் புதிய டேட்டா பெக்கேஜ் அறிமுகம்

Gavitha   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்கா வரையறையற்ற வீடியோகளை பார்த்தல், சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்கு புதிய டேட்டா பெக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதுடன் இதனூடாக பாவனையாளர்களுக்கு விரும்பியபடி ஒரே பெக்கேஜ் ஊடாக YouTube, Facebook, Facebook Messenger மற்றும் WhatsApp போன்ற நாட்டில் மிகவும் பிரபல்யமாகியுள்ள சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக எயார்டெல்லினால் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதிலும் பாதுகாப்பான சமூக இடைவெளி நடவடிக்கைகள் பின்பற்றப்படும் அதேவேளையில் இலங்கையர்கள் மத்தியில் சமூக வலைத்தள பாவனை, தகவல் பரிமாற்ற சேவை மற்றும் வீடியோக்களை பார்வையிடுவதற்காக செலவாகும் அதிகளவிலான டேட்டா பாவனைச் செலவைக் குறைக்க இந்த பெக்கேஜ் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அதிகக் கட்டணம் மற்றும் விதிமுறைகள் இல்லாமல் பாவனையாளர்களுக்கு YouTube மற்றும் Facebook ஊடாக வரையறையற்ற வீடியோக்களை பார்ப்பதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

மேலும் இந்த பெக்கேஜ் மூலம் பாவனையாளர்களுக்கு எவ்வித இடையூறுகளும் இன்றி YouTube, Facebook, Facebook Messenger மற்றும் WhatsApp உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலிக்கவும், பார்ப்பதற்கும், Chat செய்வதற்கும், Upload மற்றும் Download செய்வதற்கும் முடியும். அத்துடன் பாவனையாளரின் முன்பு உள்ள டேட்டா பெக்கேஜூக்கு மேலதிகமாக இந்த பெக்கேஜை கொள்வனவு செய்ய முடியும்.

வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறந்த விதத்தில் அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கை முறைக்கு ஏற்றவிதமாக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்கும்; இவ்வாறான காலப்பகுதியில் சந்தையிலுள்ள சிறந்த டேட்டா பெக்கேஜ்களுக்கு அப்பால் சென்று பெறுமதியை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தியுள்ள இந்த பெக்கேஜ்ஜை 286 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும். 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த டேட்டா பெக்கேஜ் Prepaid மற்றும் Postpaid பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் “My Airtel” App மூலம் அல்லது *286#க்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் இந்த பெக்கேஜை செயற்படுத்த முடியும். மேலதிக தகவல்களுக்காக www.airtel.lk அல்லது ‘My Airtel’ Appக்கு பிரவேசிக்கவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .