2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

ஒரே தினத்தில் இலங்கை வங்கியின் 3 கிளைகள் புதிய இடங்களில் திறப்பு

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - கே.எல்.ரி. யுதாஜித்

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மூன்று கிளைகள், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத் தொகுதிகளுக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன. இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருமதி. குமுதினி யோகரட்ணத்தினால் இந்தக் கிளைகள் திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, ஆரையம்பதி ஆகிய கிளைகளும்  அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் கிளையும், இவ்வாறு புதிய முகவரிகளில் திறந்து வைக்கப்பட்டன.

இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணச் செயற்பாட்டு முகாமையாளர் தமித் ஏக்கநாயக்க, இலங்கை வங்கியின் மட்டக்களப்பு மாவட்டப் பிரதேச முகாமையாளர் ஆறுமுகம் பிரதீபன், இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்டப் பிரதேச முகாமையாளர் ரஞ்சித் ஜயத்திலக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன் போது, சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதங்களோடு வாடிக்கையாளரது வைப்புகள் ஏற்று கொள்ளப்பட்டு, சுயதொழிலில் ஈடுபடும் பயனாளிகளுக்குக் கடன் வசதிகள் வழங்கப்பட்டதுடன், நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .