2020 மே 29, வெள்ளிக்கிழமை

கிராமப்புற பாடசாலைகளுக்கு செலிங்கோ லைஃவ் வகுப்பறைக் கட்டடங்கள்

Editorial   / 2019 மே 09 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃவ் மலையகத்தைச் சேர்ந்த மேலும் மூன்று கிரமப்புறப் பாடசாலைகளுக்கு வகுப்பறைக் கட்டடங்களை நிர்மாணித்து அன்பளிப்புச் செய்துள்ளது.

கம்பனியின் சமூகநலத் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி, ஏனைய செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கலகெதர (கண்டி மாவட்டம்) வெத்தேவயில் உள்ள வெத்தேவ ஆரம்ப பாடசாலை, ரத்கரவ்வ (பதுளை மாவட்டம்) கம்பெத்த வித்தியாலயம், ஹட்டன் (நுவரெலியா மாவட்டம்) லக்ஷபான மாதிரி ஆரம்ப பாடசாலை என்பனவே புதிதாக கட்டிடங்களைப் பெற்றுக் கொண்ட பாடசாலைகளாகும்.

ஆயுள் காப்புறுதித் நிறுவனம் பாடசாலை உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 75, 76, 77ஆவது திட்டங்களாக இவை நிறைவேற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X