2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மார்ச் மாதத்தில் வாகன பதிவு 4 வீதத்தால் அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4 வீதத்தால் அதிகரித்து 26,921 ஆக பதிவாகியிருந்ததாக ஜே.பி.செக்கியுரிட்டீஸ் மூலம் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக நோக்கிலான வாகனங்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் கார்களின் பதிவு என்பது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்திருந்ததுடன், ஹைபிரிட் ரக வாகனங்களின் பதிவில் அதிகரிப்பு அவதானிக்க முடிந்ததாகவும், மோட்டார் சைக்கிள்களின் பதிவில் அதிகரிப்பு காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--