2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வீற் மூலம் 'ஐ ஆம் யூ' நிகழ்வு முன்னெடுப்பு

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மிஸ் வேர்ல்ட் 2011 இல் பங்குபற்றுவதற்காக மிஸ் ஸ்ரீலங்காவாக தெரிவாகி பயணமாகவுள்ள புஷ்பிகா டி சில்வாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், ரெக்கீட் பென்கீசர் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளில் ஒன்றான வீற் 'ஐ ஆம் யூ' (I am you) எனும் நிகழ்வை முன்னெடுத்திருந்தது. கொழும்பு பார்க் ஸ்ரீட் மியுவ்ஸ் எனும் விருந்தக பகுதியில் இந்த நிகழ்வு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பெருந்திரளான முன்னணி அழகுக்கலை, இசைத்துறை, திரை மற்றும் வர்த்தக துறைகளை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ராகுல் முர்காய் கருத்து தெரிவிக்கையில் 'இந்த நிகழ்வானது எமது நாளாந்த வாழ்வில் அனைத்து பெண்களுக்கும் தமது இலட்சியங்களை எவ்வாறு அடைவது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரம்மியமான மாலைப்பொழுதில் மிஸ் வேர்ல்ட் தெரிவுக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வீற் மிஸ் ஸ்ரீலங்காவுக்கு எமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்த பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர். இவர் மிஸ் வேர்ல்ட் போட்டிக்காக தெரிவாகியிருந்த புஷ்பிகா டி. சில்வாவுக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர். அத்துடன் ஃபஷன் ஷோ நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சித்திட்டம் குறித்து ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் உதவி வர்த்தக நாம முகாமையாளர் கிறிசங்கர் ஜனாதனன் கருத்து வெளியிடுகையில் 'இந்த 'ஐ ஆம் யூ' நிகழ்வின் மூலம் இலங்கையை சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து பெண்களையும் பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீற் வர்த்தக நாமம் தனது குறிக்கோளான அழகை வரவேற்பது எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக தொடர்ந்தும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மிஸ் வேர்ல்ட் போட்டியில் பங்குபற்றும் மிஸ் ஸ்ரீலங்காவுக்கு தனது பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ளது' என்றார்.

வீற் தயாரிப்புகளை ரெக்கீட் பென்கீசர் நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வீட்டுப்பாவனை, சுகாதார நல மற்றும் பிரத்தியேக நல தயாரிப்புகளான மோர்ட்டீன், டெட்டோல், ஹார்பிக், எயார்விக், ஸ்ரெப்சில்ஸ், கோல்மன்ஸ், ரொபின், டிஸ்பிரின், கார்டிபிரின், கவிஸ்கன் மற்றும் ஃபைபோஜெல் போன்றவற்றை சந்;தைப்படுத்தியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--