2020 மே 25, திங்கட்கிழமை

Huawei ஏற்பாட்டில் ‘Roads to a Better Future’ தொழில் மாநாடு

Editorial   / 2018 ஜூன் 03 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei Lanka Carrier Congress 2018 (Huawei Carrier Congress 2018) என்ற தொழில் மாநாட்டு நிகழ்வை Huawei அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. தனது பங்காளர்கள் மீது Huawei கொண்டுள்ள தீவிரமான அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சூழல்தொகுதிக்குப் பங்களிக்க வேண்டும் என்ற அதன் ஆவல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் ‘Roads to a better future’ என்பதே இந்த ஆண்டு நிகழ்வின் தொனிப்பொருளாக அமையப்பெற்றது.   

 இந்நிகழ்வில் 5G, All-Cloud வலையமைப்பு, வீடியோ மற்றும் IoT ஆகியவற்றுக்கான  தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை Huawei முன்வைத்ததுடன், தொழிற்துறை முன்னோடிகளுடன் இடைத் தொடர்பாடல்களை ஏற்படுத்தி, தனது அனுபவம் மற்றும் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டதுடன், முன்னிலை வகிக்கும் உற்பத்திகள் மற்றும் சூழ்நிலை சார்ந்த தீர்வுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. 

ஆற்றல்கள், இணைப்புகள், வர்த்தக முறைமைகள், அனுபவம் மற்றும் பங்குடமைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் தற்போதைய வரையறை எல்லைகளுக்கும் அப்பால் செல்லும் திறன் கொண்டவையாக காவிகள் (carriers) காணப்படுகின்றன.  

 Lanka Carrier Congress 2018 நிகழ்வில் உரையாற்றிய தொலைதொடர்பாடல்கள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், “இலங்கைக்கு மிகச் சிறந்தது எதுவென்பதை இனங்கண்டு, கற்று, உள்நாட்டு தொழிற்பாட்டாளர்கள் தமது எதிர்கால பாதையை தீரமானிப்பதற்கு வழிகாட்டுவதுடன், தொழில்வாய்ப்பு சார்ந்த நிறுவனங்கள் ஒன்றுதிரண்டு, தமது தொழில்நுட்பங்களை பகிர்ந்து, வெளிப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் வழிகோலும் ஒரு மேடையாக Lanka Carrier Congress forum மாநாடு திகழும் என நம்புகின்றேன். இலங்கையில் மொபைல் தொலைதொடர்பாடலின் அடைவுமட்டமானது 130%  தாண்டியுள்ள நிலையில், தொலைதொடர்பாடல் சேவை வழங்குநர்களைப் பொறுத்தவரையில் கணிசமான வாய்ப்புகளை அது வழங்குகின்றது” என்று குறிப்பிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X