2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

Proxone appஇல் புரட்சி

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

Power World gyms இனால் கடந்த மாதம் உடற்தகைமை துறையில் புரட்சியை ஏற்படுத்திய வண்ணம் அறிமுகம் செய்யப்பட்ட Proxone app ஊடாக pay-as-you-go வசதி வழங்கப்படுவதுடன், இந்த Proxone appஇல் தற்போது பெருமளவு உடற்தகைமை, பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

“அனுபவத்துக்கான சுதந்திரம்” எனும் கொள்கையை மீளமைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த Proxone app ஊடாக, பாவனையாளர்களுக்கு தமது உடற்தகைமை இலக்குகளுக்கமைய ஒரு செயற்பாட்டுக்கு மட்டுப்படுத்தப்படாமல், காலம், இடம் என எவ்வித சிக்கல்கள் அல்லது வரையறைகளுமின்றி அவற்றை எய்தக்கூடியதாக அமைந்துள்ளது. எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு பகுதியிலிருந்தும் உடற்தகைமை செயற்பாட்டை அணுகுவதை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.  

Proxone ஊடாக தற்போது 150க்கும் அதிகமான செயற்பாடுகளை அணுகும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இதில் ரக்பி விளையாட்டுகள், வெளியிட குத்துச்சண்டை வகுப்புகள், உயர் வினைத்திறன் பயிற்சி (HIT), Zumba, தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு - பெண்களுக்கு மாத்திரம் உடற்தகைமைச் செயற்பாடுகள், சிரேஷ்ட பிரஜைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக நீச்சல், டெனிஸ், உதைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், ஸ்கொஷ், கூடைப்பந்தாட்ட மைதானம், உங்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளன. பல உடற் தகைமை செயற்பாடுகள் பல அடங்கியுள்ளன.  

கொழும்பையும் அதைச் சூழவுள்ள பகுதிகளையும் சேர்ந்த வெளியக செயற்பாடுகள் தினசரி மு.ப. 5.30 முதல் மு.ப. 7.00 மணி வரையும்,  பி.ப. 5.15 முதல் பி.ப. 6.45 வரையும் கிடைப்பதுடன், ஒரு வகுப்புக்கு தலா 250 ரூபாய் எனும் குறைந்த தொகை அறவிடப்படும். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தாம் விரும்பும் பயிற்றுவிப்பாளரைத் தெரிவு செய்து கொள்ள முடியும். இதற்காக, Proxone App இல் தெரிவு செய்து கொள்ள ஏராளமான பயிற்றுவிப்பாளர்கள், வழிகாட்டிகளின் தகவல்கள் காணப்படுகின்றன.   

பவர் வேர்ள்ட் ஜிம்ஸ் ஸ்தாபகரும் தவிசாளரும் Proxoneஇன் தயாரிப்பாளருமான தலவு எஃவ் அலைலிமா கருத்துத் தெரிவிக்கையில், “உடற்தகைமை ஆர்வலர்களுக்குப் பெருமளவு தெரிவுகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். துறையில் காணப்படும் பாரம்பரிய வழிமுறைகளை தகர்த்து, இன்றைய கால கட்டத்துக்கு உகந்த, புதிய வாழ்க்கை முறை தெரிவுகளை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். Proxone என்பது பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடற்தகைமை இலக்குகளை எய்துவதற்கு உதவியாக அமைந்துள்ளது” என்றார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது பின்புல மற்றும் விநியோகத் தொடர் உட்கட்டமைப்பு வசதியை வலிமைப்படுத்தி விரிவாக்கம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்துவோம். அதனூடாக, தினசரி அதிகரித்துச் செல்லும் செயற்பாடுகள், விற்பனை நிலையங்களில் பின்பற்றப்படும் நடவடிக்கைகளையும் உள்வாங்கக்கூடியதாக இருக்கும்”  என்றார். app என்பது உயர் மூலோபாயத் திட்டத்தை அடிப்படையில் அமைந்துள்ளது. குறிப்பாக வளர்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலுள்ளது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நிபுணர் அணியினரால் Proxone அங்கத்தவர்களுக்கு பெருமளவு தெரிவுகளை Pay-As-You-Go அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X