Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு வாகன உற்பத்தி மற்றும் பிரசித்த வாகன விநியோகஸ்தர்களாகவும் அவற்றுக்கான விற்பனைக்கு பிந்திய சேவைகள் துறையில் 3 தசாப்தங்களுக்கு மேலாக புரட்சிகரமான பங்களிப்பை வழங்கி வரும் ஐடியல் குழுமமானது, இலங்கையின் வணிகத்துறையில் முன்னோடியாக விளங்கும் Takas.lk வை கையகப்படுத்தியுள்ளது.
ஐடியல் குழுமம் அதன் தலைமை அதிகாரியாகிய நளின் வெல்கம அவர்களின் புத்தாக்கத்துடனான வளர்ச்சி தொடர்பான இந்த கையகப்படுத்தலை மேற்கொண்டுள்ளது. முற்றிலும் இலங்கையின் உரிமை நிறுவனமான ஐடியல் குழுமம் வுயமயள நிறுவனத்தை கையகப்படுத்தி இலங்கைக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் உரிமையாண்மையையுடைய இலத்திரனியல் வணிகமாகிய Takas நிறுவனம் உள்நாட்டு வணிக அபிவிருத்தியில் அதிக செல்வாக்கு செலுத்தி வருகிறது.
அபிவிருத்தியடைந்து செல்லும் இலங்கையின் வாகனங்கள் உற்பத்தி துறையில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ள ஐடியல் குழுமத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று தவிசாளருமாகிய நளின் வெல்கம இந்தக் கையகப்படுத்தல் மூலம் நாட்டின் இலத்திரனியல் வணிகத்துறையை மேலும் மெருகூட்ட திட்டமிட்டுள்ளார்.
ஐடியல் குழுமம் எப்போதும் புத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்குவதால் Takas.lk உடனான இணைந்த எமது செயற்பாடுகள் காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. மேலும் இலங்கையின் தொழிற்துறையை ஊக்குவிப்பதும் புதிய உள்நாட்டு திறமைசாலிகளுக்கு வலு சேர்ப்பதும் Takas.lk ஐ பெறுமதி வாய்ந்த வணிக நிறுவனமாக நிலை நிறுத்துவதுமே எமது உறுதிமொழியாகும். நாடுமுழுவதும் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஐடியல் குழுமத்தின் ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக இதுவரை பெற்றிராத ஒப்பற்ற சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென திருவாளர் நளின் வெல்கம தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த Takas.lk நிறுவனமானது, இலங்கையர்கள் மத்தியில் அறியப்படும் இலத்திரனியல் வணிகத்தளமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஒன்லைன் மூலமாக பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது cash on delivery (COD) பெற்றுக்கொள்ளும் முறைமையை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை Takas தன்வசம் கொண்டுள்ளது. Takas நிறுவப்பட்டது முதல் உள்நாட்டவர்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் பெறுமதி வாய்ந்த சேவையை வழங்கியுள்ள உள்நாட்டு நிறுவனம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. மேலும் Takas இன் தொழில்நுட்ப கட்டமைப்பானது முழுமையாக உள்ளமைப்பு வடிவங்களைக் கொண்டுள்ளதுடன் இலங்கையிலுள்ள இலத்திரனியல் வணிக வியாபாரங்கள் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் காணப்படும் வியாபாரங்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பங்குபற்றுநர்களுடன் நடைபெற்ற இந்த கையகப்படுத்தல் குறித்து அறிவிக்கும் நிகழ்வில் ஐடியல் குழும நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று தவிசாளருமாகிய திருவாளர் நளின் வெல்கம கருத்து தெரிவிக்கையில், “புதிய வழமையில் இலத்திரனியல் வணிகம் என்பது சிறந்ததொரு எதிர்காலத்தைக் கொண்டுள்ளது. இந்த இலத்திரனியல் வணிகமானது கொவிட் பரவல் சூழல் கட்டுப்பாட்டினுள் வந்த போதிலும் தொடர்ந்தும் நிலைத்திருக்கும், ஏனெனில் எமது வாழ்க்கை முறைகள் மற்றும் வியாபாரங்களை மேற்கொள்ளும் நடைமுறைகள் என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. பல்வேறுபட்ட நிறுவனங்களும் தமது வியாபார செயற்பாடுகளை ஒன்லைனுக்கு மாற்றி வரும் இந்தக் காலகட்டத்தில் சந்தைப் பங்கை விஸ்தரிப்பு செய்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம். புதிதாக கையகப்படுத்தப்பட்ட விற்பனை நிலையங்களிலிருந்து எழுகின்ற கேள்வியை தொடர்ந்தும் தக்க வைத்திருப்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஒன்லைன் மூலமான கொள்வனவுகளில் துரித அதிகரிப்பு பதிவாகியுள்ளது. எனவே, தற்போது காணப்படும் உறுதியான இலத்திரனியல் வணிக போக்குகளை பயன்படுத்தி நாம் தற்பொழுது நிலவுகின்ற பொருளாதார சவால்கள் நிறைந்த சூழலில் பல வியாபாரங்களுக்கு உயிரூட்டலை வழங்க வேண்டும்” என்றார்.
புள்ளி விவரங்களின் அடிப்படையில் இலங்கையின் வருடாந்த உள்ளக இலத்திரனியல் வணிக விற்பனைப் பெறுமதியானது, 40-60 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தப் பெறுமதியானது, இனிவரும் 2022-23 காலப்பகுதிகளில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 'தற்போது இலங்கையில் இடம்பெறும் மொத்த வருடாந்த விற்பனைகளின் 0.3% மாத்திரமே (13 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) இலத்திரனியல் வணிக தளங்களினூடாக இடம்பெறுகின்றன. எனவே, எமக்கு காணப்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.
Takas பெருமளவு இலத்திரனியல் சாதனங்களை தன்வசம் கொண்டுள்ளதுடன், புதிய உரிமையாண்மையின் கீழ் இந்த தயாரிப்புகள் இதர பிரிவுகளுக்கும் விரிவாக்கப்படும். ஐடியல் குழுமம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, Takas.lk துரித அன்பளிப்பு வழங்கல் பிரிவு, தினசரி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கேக் வகைகள்ஃமலர்கள் போன்ற பிரிவுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. “இந்த நெருக்கடி நிறைந்த காலப்பகுதியில் இலங்கைகயின் விநியோகஸ்தர்களுக்கு தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவும் வகையில் நாம் பணியாற்றுவோம்” என வெல்கம மேலும் குறிப்பிட்டார். விநியோகத்துக்கு முன்னதாக ஒவ்வொரு தயாரிப்பையும் வுயமயள பிரத்தியேகமாக பரிசோதிப்பதுடன் தனது உயர்தரமான சேவை தொடர்பில் பெருமை கொள்கிறது. வுயமயள இன் புதிய பணியிடம் ரொஸ்மேட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான வகையில் துரித விநியோக செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்த கையகப்படுத்தலைத் தொடர்ந்து Takas.lk நிர்வாக அணியைச் சேர்ந்தவர்கள் நிறுவனம் முழுமையாக கைமாற்றப்பட்டு உறுதியான நிலையை எய்தும் வரையில் தொடர்ந்தும் தமது நிலைகளில் பணியாற்றி, மாற்றத்தை உறுதி செய்வார்கள். Takas.lk இன் இணை ஸ்தாபகர் லஹிரு பத்மலால் இந்த கையகப்படுத்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 'முதல் நாளிலிருந்து Takas.lk இன் உறுப்பினராக திகழ்வதுடன், Takas இன் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு அவசியமான விடயங்கள் தொடர்பில் நான் உறுதியான புரிந்துணர்வைக் கொண்டுள்ளேன்.
துறையை நான் ஆக்கபூர்வமான முறையில் அணுகியிருந்தேன். இந்நிலையில் ஐடியல் குழுமம் தன்வசம் கொண்டுள்ள பெருமளவான வளங்களினூடாக, இலத்திரனியல் வணிகத் துறையில் காலடி பதித்துள்ளமையானது துறையின் எதிர்காலத்தை மேலும் விறுவிறுப்பானதாக அமையச் செய்யும் என நான் கருதுகின்றேன்” என்றார்.
குறிப்பாக பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார பிரச்சனைகள் காணப்படும் இந்த சூழலில், இந்த சகல பிரிவுகளும் Takas.lk நுகர்வோருக்கு பெருமளவு பெறுமதி சேர்ப்பதாக அமைந்திருக்கும்.
புதிய நிர்வாகத்தின் கீழ், சகல நுகர்வோர் தேவைகளுக்குமான ஒரே நிலையமாகத் திகழும் Takas.lk இன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றிய வண்ணமுள்ளது.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago