2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

விரிவுரையாளரின் பையில் துண்டிக்கப்பட்ட கைகள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட பிரபல விரிவுரையாளர் ஒருவரின் பையில் துண்டிக்கப்பட்ட இரு கைகள் காணப்பட்டமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள மொய்க்கா ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட விரிவுரையாளர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஆற்றிலிருந்து மீட்கப்பட்டபோது அவரிடமிருந்த பையில் துண்டிக்கப்பட்ட கைகளும் துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டன.

விரிவுரையாளரின் முன்னாள் மாணவியின் கைகளாக அவை இருக்கலாம் என்று ரஷ்ய சட்ட அமலாக்கப் பிரிவு கூறியதாய் CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கை துண்டிக்கப்பட்ட பெண்ணின்  சடலம் விரிவுரையாளரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளர் பெண்ணைக் கொலை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், அவர் தன்னுடைய மற்ற மாணவர்களையும் துன்புறுத்தியிருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மொய்க்கா ஆற்றில் வேறொருவரின் சடலமும் ஒரு பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது ஓர் ஆணினுடையது என்று கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .