2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

100 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்ட எச்.ஐ.வி. தொற்றுள்ள பெண்

Super User   / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான இந்திய பெண்ணொருவர் மற்றவர்களை பழிவாங்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோருடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக அப்பெண்ணின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மும்பை நகரில் எய்ட்ஸ் நோய்க்குள்ளானோருக்கான வைத்தியசாலையொன்றின் தலைமை மருத்துவரான டாக்டர் ஐ.சி. கிலாடா இது தொடர்பாக தெரிவிக்கையில்,

29 வயதான இப்பெண், தனது கணவர் மூலம் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளானார்.  புல பாலியல் துணைவர்களை கொண்டுள்ள இப்பெண் இந்நிலைமைக்கு மற்றவர்களை 'பழிவாங்குவதற்காக' ஆவேசத்துடன் மேலும் பலரை தேடித் திரிகிறார் என்பது அவருடன் கலந்துரையாடியபோது தெரியவந்தது' எனக் கூறியுள்ளார்.

இப்பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களாக டாக்டர் கிலாடா சிகிச்சையளித்து வருகிறார்.

'அப்பெண் அவரின் சகோதரியினால் எம்மிடம் கொண்டுவரப்பட்டார். அச்; சகோதரியும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்.  அப்பெண் 2005 ஆம் ஆண்டு தனது கணவர் மூலம் எச்.ஐ.வி. பொஸிட்டிவ் நிலைக்கு வந்தார் என்பதை நாம் அறிந்துகொண்டோம். அப்பெண் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்ட போதிலும், தனது கணவர் தெரிந்துகொண்டே தனக்கு எச்.ஐ.வி. தொற்றை ஏற்படுத்தினார் என்பதை அப்பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியவில்லை' என டாக்டர் கிலாடா மேலும் தெரிவித்துள்ளார்.

பணிப்பெண்ணாக கடமையாற்றிய இப்பெண்ணுக்கு உளவியல் சிகிச்சையளித்தபோது, அவர் கடந்த 3 வருட காலத்தில் சுமார் 100 ஆண்களுடன் 300 இற்கும் அதிகமான தடவை பாலியல் உறவு கொண்டுள்ளதாக அப்பெண் கூறுகிறாராம்.

'தனது எஜமானர்கள் முதல் உறவினர்கள், லிப்ட் ஊழியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினருடன் தான் பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவு கொண்டதாக அப்பெண் கூறினார்' என டாக்டர் கிலாடா தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக மும்பை மாவட்ட  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சமூகத்தின் தலைவரான டாக்டர் எஸ்.எஸ். குதால்கர்  தெரிவித்துள்ளார்.

'இது குறித்து நாம் மேற்படி வைத்தியசாலையுடன் பேசுவோம். அது உண்மையானால் அப்பெண்ணுக்கு உளவியல் சிகிச்சையளிப்போம். எச்.ஐ.வி. என்பது வெறுமனே ஒரு வைரஸ் வியாதியல்ல, அது மனித நடத்தை தொடர்பான வியாதியுமாகும்' என டாக்டர் குதால்கர் கூறுகிறார்.
 


  Comments - 0

 • mohammed Sunday, 20 February 2011 03:56 AM

  ஒரு எய்ட்ஸ் முந்நூறாக பெரிகியாச்சு இஇந்த முந்நூறும் தகாத உறவை விரும்புற கேரக்டர். இதுகள் எத்தென பேரோட உறவு வேச்சுதோ ? மொத்தத்தில இந்தியா எய்ட்ஸினாலையே அழிஞ்சிடும் இவாழ்க விபச்சாரம் இநாசமாப்போக மகா ஜனம்

  Reply : 0       0

  xlntgson Sunday, 20 February 2011 09:05 PM

  அவசரக் காதலின் விளைவு! விபச்சாரமும் உதவி செய்யும்! சிந்தித்து பார்த்து செயல்பட இளைஞர் யுவதியினர் உரிய வயதில் படித்து உரிய வயதில் தொழில் தேடி திருமணம் புரிதல் நலம். காதல் என்பது வருடக் கணக்கில் நீடிக்காமல் திருமணமே நோக்கமாக இருத்தல் நலம், அது சரி, இம்மாதிரி விடயங்களில் யார் தான் உபதேசத்தை விரும்புகின்றனர். சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை.
  கர்ப்பத்தடைகள் ஒரு புரட்சியையும் கொண்டு வரவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது! சுனாமிக்கும் பூகம்பத்துக்கும் காரணமே இது தானோ.

  Reply : 0       0

  ruthra Monday, 21 February 2011 05:08 PM

  ஒருவன் செய்த பிழைக்காக ஊரையே பலி வாங்குவது எந்த வித்தத்தில் நியாயம்? எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகிவிட்டோம் என்று தெரிந்தவுடனே மோட்சத்தை பெறுவதற்கான வழிகளை தேடியிருந்தால் நிச்சியம் இவள் போற்றப்படுவாள். மரணிக்கும் வேளையில் கூட தூற்றப்பட வேண்டும் என்பது இவள் பிறக்கும் போதே எழுதப்பட்ட தீர்ப்புப் போல. இதுதான் விதியோ?..................

  Reply : 0       0

  xlntgson Tuesday, 01 March 2011 09:04 PM

  ruthra, நல்ல புலம்பல்.
  இதற்கெல்லாம் புலம்பிப் பயன் இல்லை,
  நன்கு தெரிந்து பேசி பழகி அல்லது பெரியோர் நிச்சயித்த திருமணமாக முடித்துக் கொண்டால் சரி, இவ்வர்றானவர்கள் எக்கதி அடைவர் என்பது நமக்கு கவலை இல்லை.
  இவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது அவர்களோடு நன்கு பழக வேண்டும் என்றும் உலக சுகாதார இயக்கம் கூறுகிறதே கவனித்தீர்களா?
  மது அருந்து, வாகனம் ஒட்டாதே; மது அருந்தாதே வாகனம் ஒட்டு என்பது மாதிரிதான், சூதாட்டக் கிளப்புகள் எங்கு பார்த்தாலும் நீங்கள் தான் சூதாடாமல் இருக்க வேண்டும். எல்லாரையும் திருப்தி பண்ண முடியுமா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--