2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Super User   / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவிலுள்ள உணவு விடுதியொன்று, சமையல் நிபுணர்  வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு  விபரீதமான நேர்முகப் பரீட்சையை நடத்தியுள்ளது.  ஒரு பெண்ணை மல்லாக்கப் படுக்க வைத்து, அப்பெண்ணின் வயிற்றில் பூசணிக்காயை வைத்து அதை கத்தியால் துண்டுகளாக  வெட்டுமாறு சமையல் கலைஞர்கள் கோரப்பட்டனர்.

ஹபாய் மாகாணத்திலுள்ள ஹுபே  உணவகம் ஒன்றிலேயே இந்த விபரீதப் நேர்முகப் பரீட்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 15 விண்ணப்பதாரிகள் இப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் குறுகிய நேரத்தில் அப்பெண்ணுக்கு காயம் ஏற்படுத்தாமல் ஒரு பூசணிக்காயை சிறு துண்டுகளாக்க  வேண்டும் என்ற நிபந்தனை  விதிக்கப்பட்டது என்று உணவு விடுதியின் பேச்சாளர் தெரிவித்தார்.

சமையல் கலைஞர்கள் கத்தியைக் கையாளும் திறமையை சோதிப்பதே இதன் நோக்கம்.

இதில் 10 நிமிடங்களுக்குள் பூசணிக்காயை வெட்டிய சமையல் நிபுணர் ஹு குவா என்பவர் முதலிடம் பெற்றார்.

இந்த சோதனைக்கு முன்னர் நான் அதிக நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால்,  ஒரு பெண்ணின் வயிற்றில் வைத்து எதையேனும் வெட்டுவது இதுவே முதல் தடவையாகும் என்று அவர் தெரிவித்தார்.
 
நடுவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "ஹு குவா மிகச்சிறப்பாக வேலையை செய்திருக்கிறார். இத்துறையில் அவர் 10 வருடங்;களுக்கு மேலாக இருப்பதாக கூறிக்கொள்ளலாம்" என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--