Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில் ஆண்களும் பெண்களும் அதிகமாக புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதன் ஊடாக நாட்டிற்கு உதவ வேண்டுமென அந்நாட்டின் நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலைமையை சிறப்பாக்குவதற்கு முடியும் என நிதியமைச்சர் அலெக்ஸி குர்தின் கூறியதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல நாடுகளின் அரசாங்கங்கள் புகைத்தல், மது அருந்துதலுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்துகொண்டிருக்க, ரஷ்ய நிதியமைச்சர் இந்த விபரீதமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
'புகைப்பிடிக்கின்றவர்கள், மது அருந்துகின்றவர்கள் நாட்டிற்கு உதவி செய்கின்றார்கள். ஒருவர் ஒரு பெக்கற் சிகரட்டுக்களை புகைத்தாரென்றால் அவர் நாட்டினது பொருளாதார நிலைமைக்கு மேலும் உதவிசெய்கிறார். அதன்மூலம் அவர் ஏனைய சமூக பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறார் என்று அர்த்தம்' என ரஷ்ய நிதியமைச்சர் குர்தின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா மது மற்றும் புகைப்பிடித்தலில் உயர் நிலையில் இருக்கிறது. ஆனால், ஐரோப்பாவில் சிகரட், மதுபானத்திற்கு குறைந்த வரி அறிவிடும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும்.
இந்நிலையில், இவ்வரிகளை இரு மடங்காக்குவதற்கு கடந்த ஜூன் மாதம் ரஷ்யா திட்டமிட்டமை குறிப்பிடத்தக்கது.
புகைப்பிடிப்பதானது பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றது. புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் இளம் வயது மரணம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. மதுவினால் ஒவ்வொரு வருடத்திலும் அரை மில்லியன் ரஷ்ய மக்கள் பலியாகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏ.எவ்.பி. செய்திச்சேவையின் தகவலின்படி, ரஷ்யாவில் 65 சதவீதமான ஆண்கள் புகைப்பிடிக்கின்றார்கள். அத்துடன் ரஷ்யர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக வருடாந்தம் 18 லீற்றர் மதுவை ஒருவருடத்திற்கு அருந்துகின்றார்கள். அதிகமாக வொட்கா எனும் மதுவை அவர்கள் அருந்துகின்றார்கள்.
13 minute ago
16 minute ago
17 minute ago
1 hours ago
xlntgson Monday, 06 September 2010 08:44 PM
காந்தி பிறந்த இந்தியாவில் கூட மாம்பழச்சாற்றில் இருந்து மது தயாரித்து விற்பனைக்கு விட்டிருப்பதாக தகவல் வரும் போது இது ஆச்சரியமில்லை. உணவுக்கும் வரி விதிக்கின்றனர். மது போன்ற அனாவசியம் என்று கருதப்பட்டவற்றுக்கு அதிகமாகவே வரி! இப்போது அதில் தான் 'வண்டி' ஓடுகிறது என்று சொல்லும் அவலமான நிலை.
இதை பார்த்து மது அருந்துகின்றவர்கள் மேலும் அருந்துவார்களா, குறைத்துக்கொள்வார்களா? மதுவுக்கு முற்றுப்புள்ளி திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மது பாவனை அதிகமாம் அரசு யோசனைகளுக்கு எப்போதும் ஒத்துழையாமை மக்கள் இயல்பு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
17 minute ago
1 hours ago