2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஓவியம் வரையும் மனிதக்குரங்கு

Kogilavani   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altசர்கஸ் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதிலிருந்து ஓய்வுப் பெற்ற மனிதக் குரங்கு ஒன்று ஓவியம் வரைவதை தனது பொழுதுப்போக்காகக் கொண்டுள்ளது. பிரேஸிலுள்ள மிருகக் காட்சி சாலையில் தனது ஓவியத்தினூடாக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது இந்த மனிதக் குரங்கு.

26 வயதுடைய ஜிம்மி என்ற இந்தக் குரங்கு, நைட்டிரோய் மிருகக் காட்சிசாலையில் தொடர்ந்து மூன்று வாரங்கள் அழகான ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களை பிரமிக்கச் செய்துள்ளது.

இக்குரங்கின் பயிற்றுவிப்பாளர் ரோச்ட் சேபா இது தொடர்பாக கூறுகையில், "ஏனைய மனிதக் குரங்குகள் போல், ஜிம்மி விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடுவதற்கு விருப்பமில்லை.

அதனால் 03 வாரங்களுக்கு முன்பு ஏனயை மிருகக் காட்சிசாலைகளில் உள்ள மிருகங்களின் ஓவியத் திறன்  பற்றி வாசித்தப்பின் ஜிம்மிக்கும் ஓவியம்  வரைவதற்கு பயிற்றுவித்தேன்" என்றார்.

"ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் அக்குரங்கு மிகவும் கவனமாக பிளாஸ்திக் கொள்கலன்களிலிருந்து பெயின்றை எடுத்து,  அழகான ஓவியங்களை வரைகின்றது" எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--