2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஓமன் - இந்தியா தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம்

Freelancer   / 2025 டிசெம்பர் 19 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கு அந்நாட்டில் வரிரத்தாகிறது. அங்கிருந்து இறக்குமதியாகும் 95 சதவீத பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஓமன் சென்றார். அவரது முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஓமன் வர்த்தக அமைச்சர் குவாயிஸ் பின் முகமது அல் யூசப் கையெழுத்திட்டனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X