2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

உயிருள்ள பாம்பை மூக்கில் நுழைத்து சாகசம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவைச் சேர்ந்த ஒருவர் வேடிக்கையான பல சாகசங்களைப் புரிந்ததால் 'மிகுந்த பல்கலைத் திறமையுள்ள கலைஞர்' என்று தனது பெயர் உலக சாதனை புத்தகத்தில் பதியப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.

தென்மேற்கு சீனாவின் குயிஸோ மாகாணத்தைச் சேர்ந்த யாங் குவாங் என்பவர் தன்னால் 30 விசித்திரமான சாகசங்களை நிகழ்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

அதை  நிரூபிப்பதற்காக, அவர் ஹுனான் மாகாணத்திலுள்ள தலைநகரில் அனைத்து சகாசங்களையும்  ஒரே நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

எரியும் மின்குமிழ்கள் மீதேறி நிற்றல், கண் இமைகளில் கட்டி தண்ணீர் வாளியை தூக்குதல், தனது நாசியினுள் இலத்திரணியல் துளைக்கருவியை செலுத்தல், கூர்மையான கத்தியின் முனை மீது நிற்றல், காரை தனது கண் இமையால்  இழுத்தல் போன்ற சாகசங்களை அவர் புரிந்துள்ளார்.

அத்துடன், அவர் உயிருடன் உள்ள பாம்புக் குட்டியொன்றை தனது நாசித் துவாரத்தால் உள்ளே அனுப்பி தனது வாயிலிருந்து அந்தப் பாம்புக்குட்டிகளை இழுத்து, பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தார்.

அவரைப் போலவே வேறு சிலரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக  அவரின் காதலி வெங் மெய் (வயது 22) தனது கழுத்தில் அழுத்திப் பொருத்தப்பட்ட கத்தியொன்றின் மூலம்  காரொன்றை இழுத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .