Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியிலுள்ள நகரமொன்று தனது வரவுசெலவுத் திட்டத்தில் 100 மில்லியன் யூரோ துண்டுவிழும் தொகையை சமாளிப்பதற்கு புதிய திட்டமொன்றை முன்வைத்துள்ளது. அந்நகரில் உள்ள விபசாரிகளிடம் தினசரி வரி அறவிடுவதனூடாக வருமானத்தை அதிகரிப்பதுதான் அத்திட்டம்.
இதன்படி, டோர்ட்மன்ட் நகரில் பாலியல் தொழிலாளிகளாக பணியாற்றும் ஒவ்வொரு பெண்ணும் 6 யூரோ பெறுமதியுள்ள டிக்கட்டை வாங்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அபராதத்தொகையை செலுத்த நேரிடும். ' டே டிக்கெட' என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி அறவீட்டினூடாக வருடமொன்றுக்கு 750,000 யூரோ பணத்தை பெறமுடியுமென டோர்மன்ட் நகர நிர்வாகம் எதிர்பார்கின்றது.
ஜேர்மனியின் ஏனைய நகரங்களைப் போலவே டொர்ட்மன்ட் நகரமும் அதிகளவில் பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது என நகரின் ஊடக பேச்சாளர் மைக்கல் மெய்ன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
' பல்வேறு பாலியல் வரிகள் குறித்து ஆலோசித்தோம். ஆனால் இதுவே மிகவும் நடைமுறை சாத்தியமான முன்மொழிவு ' என அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வாரத்தில்தான் டே டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
முன்வைக்கப்பட்ட மாற்று யோசனைகளில், டோர்மன்ட்டின் சிவப்பு விளக்குப் பகுதிக்குச் செல்லும் ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு யூரோ பெறுமதியான டிக்கெட் ஒன்றை வாங்கவேண்டுமென்பதும் அடங்கும். ஆனால் இதற்கு குறைந்தளவு அரசியல் ஆதரவே கிடைத்தது எனவும் மைக்கல் மெய்ன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் விபசாரம் சட்டபூர்வமானதாகும். அங்கு பாலியல் தொழிலாளர்கள் வருமான வரியும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
48 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
tamilsalafi.edicypages.com Thursday, 23 December 2010 12:59 AM
உலகம் எங்கே போகிறது என்று தெரிகிறதா ? கெட்டு குட்டிச் சுவராகிக் கொண்டு போகிறது என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago