2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

திருமண ஆண்டு நிறைவுக்காக மனைவிக்கு மலசலக்கூடப் பரிசு

Kogilavani   / 2011 ஜூன் 10 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

30 ஆவது திருமண ஆண்டு நிறைவையொட்டி தனது மனைவிக்கு பரிசொன்றை வழங்க விரும்பிய கணவன் பிரமாண்டமான மலசலக்கூடமொன்றை பரிசளித்த சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான நிக் வில்லான் (வயது 53) 104,000 ஸ்ரேலிங் பவுண்களுக்கு மேற்படி மலசலக்கூடத்தை வாங்கியுள்ளார்.

தமது திருமணத்தின் 30 ஆவது  ஆண்டு நிறைவையொட்டி மனைவிக்கு ஆச்சிரியமளிக்கும் வகையில் பரிசொன்றை வழங்க வேண்டும் என நினைத்து மேற்படி மலசலக்கூடத்தை அவர் வாங்கினாராம்.

போபோல்க், ஷேர்மிங்காம் நகரில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள மேற்படி மலசலக்கூடத்தை அதனது பெறுமதியைவிட இரு மடங்கு விலைக்கு வில்லான் குறித்துள்ளார். அக்கட்டிடத்தை விடுமுறைக்கு உபயோகிக்கலாம் என வில்லான் தீர்மானித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், 'எனது மனைவியும் நானும் விடுமுறைக் காலத்தை நோபோல்க் கடற்கரையில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். இந்நிலையில் 30 ஆவது திருமண ஆண்டு நிறைவாக மனைவிக்கு இதனை வழங்கலாமென்பது எனது திட்டமாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

கடற்கரைக் காட்சிகளை வீட்டின் உள்ளிருந்தே பார்க்க வசதியான பெரிய ஜன்னல்களையும் மற்றும் சுருளான படிக்கற்களையும் இவ்வீட்டிற்குள் இணைக்க வேண்டுமென அவர் தீர்மானித்துள்ளார்.

வில்லானின் மனைவி (வயது 51) கருத்துத் தெரிவிக்கையில், 'திருமண ஆண்டு நிறைவு விழாவுக்காக இதை பரிசளிப்பது ஒவ்வொருவரினதும் யோசனையாக இருக்காது. ஆனால் இதை புனரமைத்தவுடன் இது மிகச் சிறந்த பரிசாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .